பங்கு சந்தை போன்ற REIT முதலீட்டை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

Advertisement

REIT INVESTMENT 

ஒருவரின் தனிப்பட்ட நிதி மேலாண்மையில், அதிகம் அக்கறை செலுத்தவேண்டியது, ஓய்வு கால வாழ்கை முறை பற்றி தான். நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களுக்கு நிலையான வருமான ஆதாரம் இருக்காது. மேலும், உங்கள் வங்கியில் உள்ள சேமிப்புகள் உங்கள் செலவுகளை ஈடு செய்யாது, ஏனெனில் பணவீக்கம் அவற்றைச் சாப்பிட்டு விடும், உங்கள் விருப்பப்பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் சக்தியையும்  குறைக்கும். 

நீங்கள் ஓய்வு பெறும் வயதில் உங்கள் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு பணம் தேவைப்படும் என்பதாலும், பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு நமது வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கவும், பணியின் போது இருந்த வாழ்க்கைத்தரம் நிலையாக இருக்கவும், நமக்கு நிலையான வருமானம், பணி ஓய்விற்கு பிறகும் தேவைப்படுகிறது. அப்படி ஒரு நிலையான வருமானம் வரக்கூடிய திட்டத்தை நாம் நமது பணிக்காலத்திலேயே  திட்டமிட தொடங்க வேண்டும். அப்படி திட்டமிடலை தொடங்குவதற்கு முன் சந்தையில் உள்ள சிறந்த முதலீட்டிற்கான தெரிந்துகொள்வது அவசியம். அந்த வகையில் இன்று REIT முதலீடு பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

REIT:

REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கமாகும்.

பங்கு சந்தை போல், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய உருவாக்கப்பட்ட ஒரு முதலீடு தான் REIT.

இது பங்கு சந்தைப்போல் செயல்படும். அதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய நாம் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்குகின்றோம். அந்த நிறுவனத்தில் வரும் வருமானத்தில் உங்கள் பங்குகளின் சதவீதத்தை பொறுத்து உங்களுக்கான தொகை உங்களுக்கு கிடைக்கும். அதைபோல் தான் REIT முதலீடும்.

REIT-யில் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் உங்களின் முதலீடு இருக்கும். நீங்கள் முதலீடு ரியல் எஸ்டேட் சொத்தில் வரும் வருமானத்தை REIT அதன் ஹோல்டர்களுக்கு அவர்களின் முதலீட்டு விகிதங்கள் அடிப்படையில் வழங்கும்.

REIT முதலீடு :

Share Market முதலீடு போல் இதில் முதலீடு செய்ய Demat account கட்டாயம் தேவை.

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டிற்கு

  • நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்(NSE)
  • பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(BSE ) என்னும் 2 பங்கு சந்தைகள் இருப்பது போல்,

REIT-யில் முதலீடு செய்ய

  • தூதரக வணிக பூங்கா REIT (Embassy Office Parks REIT),
  • மைண்ட்ஸ்பேஸ் வணிக பூங்காக்கள் REIT (Mindspace Business Park REIT),
  • புரூக்ஃபீல்ட் இந்தியா REIT (Brookfield India Real Estate Trust)

முதலீட்டுத் தொகை:

Rs. 15,000 வரையிலான குறைந்தபட்ச முதலீட்டு வரை நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.

முதிர்வு மற்றும் வருமானம்:

REIT  முதலீட்டை நாம் பாதியில் திரும்ப பெற விரும்பும் பட்சத்தில், நம்மிடம் உள்ள யூனிட்களை விற்று பெற்றுக்கொள்ளலாம்.

REIT முதலீட்டின் ஈவுத்தொகை மற்றும் உங்கள் பங்கின் மதிப்பு உயர்வதன் மூலம் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

வணிக ரியல் எஸ்டேட் ஆண்டுக்கு 8% முதல் 10% வரை வருமானத்தை வழங்குகிறது.  REIT – களில் முதலீட்டின் மீதான வருமானம் 6 மாதங்களில் 8% முதல் 14% வரை அதிகரிக்கும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement