Rs 5000 SCSS in Post Office Investment Plan in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் ஒரு சிறந்த முதலீடு திட்டம் பற்றியும், அதில் நாம் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் அசல் மற்றும் வட்டியாக கிடைக்கும் என்பதை தான் தெளிவாகவும், விளக்கமாகவும் பார்க்க இருக்கின்றோம். அதாவது ஒரு வீட்டில் ஆண் மற்றும் பெண் இருவரில் யாராவது ஒருவர் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ்க்கையினை நல்ல முறையில் வாழலாம். இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தினை நமது செலவுகள் அனைத்தும் பூர்த்தி ஆன பிறகு அதில் ஒரு பங்கினை சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் யார் ஒருவரின் உதவியும் இல்லாமல் மகிழ்ச்கியாக வாழலாம். அதேபோல் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பணத்தினை வீட்டிலேயே வைத்து சேமித்தால் அதற்கான வட்டி என்ற ஒன்று கிடைக்காமல் அப்படியே இருக்கும். அதுவே ஒரு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது வட்டியுடன் கூடிய அசல் கிடைக்கும். ஆகையால் இவற்றிற்கு ஏற்ற மாதிரியான ஒரு முதலீட்டை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அஞ்சல்துறை சீனியர் சிட்டிசன் திட்டம்:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் சிறப்பே மூத்த குடிமக்களுக்கு என்று பிரத்யோகமாக திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேமிக்க முடியும்.
மேலும் மூத்த குடிமக்களுக்கு திட்டம் அஞ்சல்துறை மற்றும் இதர வங்கியிலும் உள்ளது.
முதலீட்டிற்கான தொகை எவ்வளவு..?
உங்களுடைய முதலீட்டிற்கான குறைந்தப்பட்ச தொகையாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்ச தொகையாக 30,00,000 ரூபாய் வரையிலும் சேமித்து கொள்ளலாம்.
அதேபோல் இதில் மூன்று நபர்கள் சேர்ந்த கூட்டு கணக்காகவும் ஓபன் செய்து கொள்ளலாம்.
முதலீட்டிற்கான வட்டி விகிதம்%:
முதலீடு செய்யும் தொகைக்கான வட்டி விகிதமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி தொகையும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.
முதிர்வு காலம்:
சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கான முதிர்வு காலமாக 5 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
இடைநிலை கணக்கு முறை:
இதில் நீங்கள் சேமித்து கொண்டிருக்கும் போது பிரீமேச்சுவராக 1 வருடத்தில் கணக்கினை முடித்து கொள்ள விரும்பினால் 1.5% தொகை பிடித்தம் செய்யப்படும். ஒருவேளை 2 வருடம் கழித்து கணக்கினை குளோஸ் செய்தால் 1% தொகை பிடிக்கப்படும்.
தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
Rs 5000 SCSS Interest Rate in Post Office 2023:
முழு விளக்கம்:
முதலீடு தொகை: 5,000 ரூபாய்
வட்டி விகிதம்%: 8.2%
சேமிப்பு காலம்: 5 வருடம்
மொத்த வட்டி தொகை: 2,050 ரூபாய்
மூன்று மாத வட்டி: 102 ரூபாய்
அசல் தொகை: 7,050 ரூபாய்
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
போஸ்ட் ஆபீசில் 9% வட்டியுடன் மாதம் 10,000 ரூபாய் வருமானம் அளிக்கும் முதலீடு திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |