சேமிப்பு VS முதலீடு எது சிறந்தது.?

Advertisement

Savings or Investment Which is Better

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் அன்றைய நாள் பணத்தை சம்பாதித்து அன்றைய நாள் செலவுகளை சமாளித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இப்படியா இருக்கின்றது. இன்னைக்கு ஒரு விலை விற்குது, நாளைக்கு ஒரு விலை விற்குது, நாளுக்கு நாள் விலைவாசி ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அதனால் நீங்கள் சேமிக்கின்ற பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பலரும் சேமிப்பதில் குழப்படைகிறார்கள். அதாவது சேமிக்கலாமா அல்லது முதலீடு செய்யலாமா என்ற கேள்விகள் இருக்கிறது. மேலும் இதில் இருக்கும் வித்தியாசம், எது சிறந்தது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

சேமிப்பு என்றால் என்ன.?

சேமிப்பு என்பது நீங்கள் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து வைப்பதாகும். இந்த பணத்தை வீட்டிலேயே சேமித்து வைத்திருப்பீர்கள். இல்லையென்றால் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருப்பீர்கள்.

முதலீடு என்றால் என்ன.?

முதலீடு என்பது உங்களது பணத்தை ஒரு திட்டத்தில் சேமிக்கும் முறையாகும். அதாவது ஒரு முதலீடு திட்டத்தில் சேமிக்கும் முறையாக இருக்கின்றது. நீங்கள் இப்படி முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி கிடைக்கும்.

அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் சேமிப்பு திட்டங்கள் உங்களுக்காக

சேமிப்பு vs முதலீடு எது சிறந்தது.?

சேமிப்பு vs முதலீடு எது சிறந்தது

நீங்கள் வீட்டிலேயே சேமிக்கும் முறைகளிலும் சரி அல்லது வங்கி கணக்கில் சேமித்திருந்தாலும் சரி அதனால் எந்த பயனும் இருக்காது. ஏனென்றால் இது போல நீங்கள் சேமிக்கும் தொகைக்கு எந்த விதமான வட்டியும் இருக்காது. அது போல நீங்கள் சேமிக்கும் பணத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்வீர்கள். உஞ்சகளுக்கு பண தேவைப்படும் போதெல்லாம் எடுத்து இதனை செலவு செய்திடுவோம்.

அதுவே முதலீடு செய்தால் ஒரு திட்டத்தில் தொடர்ந்து சேமிப்பதாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்களது பணமானது பெருகி கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதற்கு வட்டி என்பது கிடைக்கும்.

பணத்தை வங்கிகளில் சேமிப்பதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் இதிலிருந்து நல்ல தொகை கிடைக்கும்.

நாம் ஓவ்வொரு மாதமும் வங்கியில் தொகையை சேமிப்பதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனத்தில் அந்த தொகையை முதலீடு செய்தால் அது 10 அல்லது 20 வருடத்திற்கு பிறகு நாம் எதிர்பார்க்காத அளவிற்கு லாபத்தை கொடுக்கும்.

பணத்தை பல மடங்கு பெருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் சேமிப்பதை விட்டு முதலீடு செய்யுங்கள். நம் பணத்தை சேமிப்பதை விட முதலீடு செய்வதே சிறந்தது என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்.!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement