SBI 5 Lakh Investment Plan for Fixed Deposit
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் நம்முடைய வாழ்க்கைக்கும், பணத்தினை தேவைக்கும் ஏற்ற மாதிரியான ஒரு முதலீடு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது பாரத ஸ்டேட் வங்கி ஆன SBI வங்கியில் நாம் ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் வரையிலும் அசல் தொகை பெறலாம் என்பதையும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதையும் பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அதிலும் குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆகவே இதில் ஒரு நபர் 5 லட்சம் ரூபாயினை முதலீடு செய்வதன் விளைவாக எவ்வளவு வட்டி மற்றும் அசலை பெறலாம் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI பேங்க் பிக்சட் டெபாசிட் திட்டம்:
வயது தளர்வு:
பாரத ஸ்டேட் வங்கியில் 18 வயது பூர்த்தி ஆன இந்திய குடிமக்கள் ஆகிய ஆண்கள் மற்றும் பெண்கள் என இவருவரும் முதலீடு செய்து கொள்ளலாம்.
சேமிப்பு தொகை:
சேமிப்பு தொகை என்பது இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக என்பது வரம்பில் கிடையாது. மேலும் இதில் சேமிப்பு தொகை உங்களது விருப்பமே.
வட்டி விகிதம்:
வட்டி விகிதம் ஆனது சீனியர் சிட்டிசன் மற்றும் பொதுமக்களுக்கு என்று பிரித்து அளிக்கப்படுகிறது. மேலும் உங்களின் முதிர்வு காலம் என்ன என்பதை பொறுத்து தான் வட்டி விகிதமும் அமையும்.
திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
7 முதல் 45 நாட்கள் | 3% | 3.50% |
46 நாட்கள் முதல் 180 நாட்கள் | 4.50% | 5% |
181 நாட்கள் முதல் 210 நாட்கள் | 5.25% | 5.75% |
211 நாட்கள் முதல் 1 வருடம் | 5.75% | 6.25% |
1 முதல் 2 வருடம் வரை | 6.80% | 7.30% |
2 முதல் 3 வருடம் வரை | 7.00% | 7.50% |
3 முதல் 5 வருடம் வரை | 6.50% | 7.00% |
5 முதல் 10 வருடம் வரை | 6.50% | 7.50% |
முதிர்வு காலம்:
பிக்சட் டெப்பாசிட் திட்டத்தில் முதிர்வு காலமாக 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை அளிக்கப்படுகிறது.
5 லட்சம் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
பொதுமக்கள்:
சாதாரண நபர் ஒருவர் 5,00,000 ரூபாயினை 10 வருட கால அளவில் முதலீடு செய்தால் 6.50% வட்டி விகிதத்தின் படி வட்டி தொகையாக 4,52,779 ரூபாய் கிடைக்கும்.
மேலும் அசல் தொகையாக 9,52,779 ரூபாய் வரையிலும் கிடைக்கும்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
சீனியர் சிட்டிசன்:
அதுவே சீனியர் சிட்டிசன் 10 வருட கால அளவில் 5,00,000 லட்சம் ரூபாயினை டெபாசிட் செய்தால் வட்டி 7.50% அளிக்கப்படுகிறது. ஆகவே வட்டி தொகையாக 5,51,175 ரூபாயினையும், அசல் தொகையாக 10,51,175 ரூபாயினையும் பெறலாம்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |