SBI பேங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 5,00,000 ரூபாய் பெறலாமா..?

sbi investment plans for 5 years calculator in tamil

SBI Investment Plans for 5 Years Calculator 

பாரத ஸ்டேட் வங்கி என்று அழைக்கப்படும் SBI பேங்க் ஆனது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வங்கியாக இருக்கிறது. அந்த வகையில் நாம் SBI வங்கிக்கு நிறைய முறை சென்று இருப்போம். ஆனால் அங்கு நமக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் எதையும் பற்றி நாம் கண்டு கொள்ள மாட்டோம். அதாவது ஒவ்வொரு வங்கியிலும் பண பரிவர்த்தனை, கடன்கள் இவற்றை எல்லாம் தவிர எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்தகைய திட்டங்களில் எது நமக்கு ஏற்றதாக இருக்கும் என்று சிந்தித்து முதலீடு செய்வதால் நாம் குறிப்பிட்ட ஒரு தொகையினை பெறலாம். ஆகவே SBI வங்கியில் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்வதனால் நாம் எவ்வளவு வட்டி மற்றும் அசலாக பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI RD Scheme Details 2023:

ஒரு நபர் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர வேண்டும் என்றால் அதற்கு முதலில் 18 வயது ஆனது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் சேமிப்பு தொகையாக ஆரம்பத்தில் 100 ரூபாய் முதல் எவ்வளவு ரூபாய் வரை வேண்டுமானாலும் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் உங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது.

வட்டி விகிதம்%:

RD திட்டத்திற்கான வட்டி விதமாக 6.50% முதல் 7.50% வரை பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என பிரித்து அளிக்கப்படுகிறது.

மேலும் உங்களின் முதிர்வு காலத்தை பொறுத்தே வட்டி விகிதம் என்பது அமையும்.

சேமிப்பு காலம்:

உங்களுடைய திட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது 6 மாதம் முதல் 10 வருடம் வரை ஆகும். ஆகவே இதனையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேமிக்கலாம்.

ஜென்ரல் சிட்டிசன்:

மாத சேமிப்பு தொகை 10,000 ரூபாய் 
சேமிப்பு காலம் 5 வருடம் 
வட்டி விகிதம் 6.50%
மொத்த சேமிப்பு தொகை 6,00,000 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,09,902 ரூபாய் 
முதிர்வு கால தொகை 7,09,902 ரூபாய் 

 

சீனியர் சிட்டிசன்:

மாத சேமிப்பு தொகை 10,000 ரூபாய் 
சேமிப்பு காலம் 5 வருடம் 
வட்டி விகிதம் 7.00%
மொத்த சேமிப்பு தொகை 6,00,000 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,19,325 ரூபாய் 
முதிர்வு கால தொகை 7,19,325 ரூபாய் 

 

10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு