தினமும் 415 ரூபாய் போஸ்ட் ஆபிசில் முதலீடு செய்து 67 லட்சம் பெற வேண்டுமா..?

Advertisement

Selvamagal Semippu Thittam Investment Pan in Post Office in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் முதலீடு அல்லது சேமிப்பு என்ற இரண்டுமே மிகவும் முக்கியமான ஒன்றாக தான் உள்ளது. ஏனென்றால் இத்தகைய முறையில் நாம் சேமித்து வைக்கும் பணம் தான் நமக்கு பிற்காலத்தில் உதவக்கூடிய ஒன்றாக மாறுகிறது. அதன் படி பார்த்தால் நாம் முதலீடு செய்வதற்கு முன்பாக நமக்கான ஒரு இலக்கினை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் நாம் செய்யும் முதலீட்டிற்கு எவ்வளவு வட்டி மற்றும் முதலீட்டு தொகை வரும் என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே இன்று செல்வமகள் சேமிப்பு திட்டடத்தில் 67 லட்சம் ரூபாய் முதலீட்டு தொகையினை பெற நாம் எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

வயது தகுதி:

தபால் துறையில் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மட்டும் தான் சேமிக்க முடியும். மேலும் இது பெண் குழந்தைகளுக்கான திட்டம் மட்டுமே ஆகும்.

அதேபோல் ஒரு வீட்டில் 2 பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தில் சேரலாம்.

சேமிப்பு தொகை:

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு 250 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 1,50,000 ரூபாய் வரையிலும் செலுத்தலாம். ஆகவே சேமிப்பு என்பது உங்களின் விருப்பம்.

வட்டி விகிதம்%:

இந்த திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதமாக 8.0% தோராயமாக அளிப்படுகிறது.

சேமிப்பு காலம்:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலமாக 21 வருடங்கள் இருந்தாலும் கூட முதல் 15 வருடம் மட்டுமே நீங்கள் தொகையினை செலுத்தினால் போதுமானது.

நீங்கள் மொத்த அசல் தொகையினை 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தான் பெற முடியும்.

போஸ்ட் ஆபீஸ் RD Vs SBI வங்கி RD இரண்டில் எதில் முதலீடு செய்வது லாபம்.. 

67 லட்சம் கிடைக்க மாதம் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்களுடைய குழந்தையின் பெயரில் மாதம் 12,450 செலுத்தி வந்தீர்கள் என்றால் மொத்த முதலீடு தொகையாக 15 வருடத்தில் 2,24,100 ரூபாய் வரும்.

மேலும் இந்த திட்டத்திற்கான மொத்த வட்டி தொகையாக 44,75,145 ரூபாய் கிடைக்கும்.

அப்படி என்றால் 21 வருடம் கழித்து வட்டி மற்றும் அசல் தொகையாக 67,16,145 ரூபாய் பெறலாம்.

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement