SIP vs Lumpsum எது முதலீடு செய்ய சிறந்தது?

Advertisement

SIP or Lumpsum Investment Which is Better in Tamil

முதலீடு செய்வதற்கு முன் நாம் முதலி தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் SIP மற்றும் Lumpsum ஆகும். இந்த SIP, Lumpsum அப்படியன்ன என்ன?, இவற்றில் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன?, எந்த நேரத்தில் நாம் SIP மற்றும் Lumpsum-யில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்தால் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் மற்றும் மேலும் உங்களுக்கு இவற்றில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

SIP மற்றும் Lumpsum என்றால் என்ன?sip vs lumpsum

நமது சேமிப்பை சிறுக சிறுக கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதை SIP என்று சொல்லலாம். Lumpsum என்பது ஒரு பெரிய தொகையை ஒரே ஒரு முறை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து பிறகு அதன் மூலம் பெரிய அளவில் லாபம் பார்ப்பதற்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SIP-யில் 100 ரூபாய் முதலீடு செய்தால் 10 லட்சம் வருமானம் கிடைக்கும்..!

SIP Advantages:

SIP-யில் நீங்கள் மாதம் மாதம் 120 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு ஜனவரி மாதம் 120 முதலீடு செய்கிறீர்கள், பிப்ரவரி மாதம் மார்க்கெட் 10 ரூபாய் இறங்கு உள்ளது அப்போ நீங்கள் 110 ரூபாய்க்கு முதலீடு செய்கிறீர்கள். அதேபோல் மார்ச் மாதமும் மார்க்கெட் 10 ரூபாய் இறங்கியுள்ளது அப்போது நீங்கள் 100 ரூபாய்க்கு முதலீடு செய்கிறீர்கள். ஆக நீங்கள் சராசரியாக 110 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். ஆக நீங்கள் கூடுதளவும் முதலீடு செய்திருப்பீர்கள், குறைவாகவும் முதலீடு செய்திருப்பீர்கள். இதுவும் SIP-யின் மிக பெரிய Advantages ஆகும்.

SIP-யில் நீங்கள் செய்யும் முதலீட்டை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கலாம். சில சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மால் முதலீடு செய்யமுடியாத நிலையில் அதனை Stop செய்தும் வைத்துக்கொள்ளலாம். இது SIP-யில் இருக்கும் மிக பெரிய Advantages ஆகும்.

மேலும் SIP-யில் மாதம் மாதம் மிக குறைந்த அளவில் கூட முதலீடு செய்ய முடியும். இதுவும் SIP-யின் மிக சிந்த Advantages ஆகும்.

SIP-யில் எப்போது முதலீடு செய்யலாம்?

பொதுவாக SIP-யில் ஒரு மார்க்கெட் இறங்கி கொண்டே இருக்கிறது என்றால் அந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். அது தான் சரியான நேரம் ஆகும். எந்த ஒரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் சரி அதில் நீங்கள் குறைந்து ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல லாபம் கிடைக்கும். அது போன்று தான் SIP-யும்.

Lumpsum:

இது SIP-க்கு அப்படி எதிரானது ஆகும். அதாவது உங்களிடம் ஒரு பெரிய அளவில் தொகை உள்ளது அதனை மொத்தமாக முதலீடு செய்வதாகும். Lumpsum-யில் இருக்கும் மிக பெரிய Advantages எதுவென்றால். நீங்கள் சரியான நேரத்தில் முதலீடு செய்ய முடியும்.

அதாவது மார்க்கெட் இப்போது நன்றாக இறங்கியுள்ளது. ஆக இந்த சமயத்தில் மார்க்கெட் மீண்டும் உயரும் என்று நன்கு நீங்கள் Research செய்த பிறகு நீங்கள் முதலீடு செய்யும் போது மார்க்கெட் ஏறினால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த Lumpsum-யிலும் நீங்கள் குறைந்தது 5 வருடம் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானத்தை பெற முடியும்.

SIP vs Lumpsum எது முதலீடு செய்ய சிறந்தது?

இந்த இரண்டில் உங்களுக்கு எது ஏற்றதோ அதில் நீங்கள் தாராளமாக முதலீடு செய்துகொள்ளவும். எளிதாக சொல்லவேண்டும் என்றால் SIP-யில் ஒரு மார்க்கெட் இறங்கும் போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம். அதுவே ஒரு மார்க்கெட் நன்றாக இறங்கி தற்பொழுது உயரும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் என்றால் Lumpsum-யில் முதலீடு செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடி கணக்கில் லாபம் தரும் சிறந்த 5 SIP திட்டங்கள்..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement