SIP Vs RD in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை கண்டு நாம் அனைவரின் மனத்திலேயும் ஒரு பொதுவான சிந்தனை எழும். அது என்னவென்றால் இப்பொழுதே நமது வாழ்க்கையை சீராக நடத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ளதே இந்நிலையில் நமது எதிர்காலத்தில் இந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு மாறும் என்பதை நம்மால் கணக்கிடவே முடியாது என்பது தான். அதனால் அனைவருமே தங்களது இன்றைய வாழ்க்கைக்காக சம்பாதிப்பதுடன் நமது எதிர்காலத்திற்கும் சேர்த்து சேமிக்க அல்லது முதலீடு செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள். அதனால் அனைவருமே சேமிக்க அல்லது முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு எப்படி சேமிப்பது அல்லது முதலீடு செய்வது எப்படி சேமித்தால் அல்லது முதலீடு செய்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஒரு பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவு நோக்கத்தில் தான் இன்றைய பதிவில் முறையான முதலீட்டுத் திட்டம் மற்றும் தொடர் வைப்புத்தொகை ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இன்றைய பதிவை முழுதாக படித்து இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
PPF Vs EPF இதில் எதில் முதலீடு செய்வது சிறந்தது என்று தெரிஞ்சிக்கோங்க
SIP Vs RD Which is Better in Tamil:
முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது Systematic Investment Plans (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீடு வழி ஆகும்.
இந்த முறையில் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக மாதமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலையாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
தொடர் வைப்புத்தொகை அல்லது ஆர்.டி கணக்கு (RD) என்பது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் NBFC-கள் தொடர்ச்சியான வைப்புகளை நிதி தயாரிப்புகளாக வழங்குகின்றன. அதாவது வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFC)-களில் நாம் மாதாந்திர அடிப்படையில் டெபாசிட் செய்வது.
இறுதியில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை அளிப்பதாகும்.
இப்பொழுது SIP மற்றும் RD ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இங்கு காணலாம் வாங்க.
NPS Vs PPF இவ்விரண்டில் எதில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்
அளவுகோல் | முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) | தொடர் வைப்புத்தொகை (RD) |
முதலீட்டு வகை | தனிநபர்கள் தங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் காலாண்டு, மாதாந்திர அல்லது அரையாண்டு போன்ற நிலையான இடைவெளியில் முதலீடு செய்கிறார்கள். | முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். |
வட்டிவிகிதம் | SIP 12% முதல் 22% வரை | வட்டி விகிதங்கள் 5% முதல் 9% வரை |
பதவிக்காலம் | SIP-ல் குறிப்பிட்ட கால எல்லை எதுவும் இல்லை | RD-ல் முதிர்வு காலம் ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். |
ஆபத்து | SIP-களுடன் தொடர்புடைய அபாயங்கள், ஒருவர் தேர்ந்தெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் வகை மற்றும் ஒட்டுமொத்த சந்தை நிலையைப் பொறுத்தது மாறுபடும். | முதலீட்டிற்கான பாதுகாப்பான விருப்பங்களில் இதுவும் ஒன்றாகும். தொடர் வைப்புகளில் நடைமுறையில் எந்த ஆபத்தும் இல்லை. |
வரிவிதிப்பு | ஒருவரின் STCG மற்றும் LTCG-க்கு வரிவிதிப்பு பொருந்தும். | தொடர் வைப்புத்தொகைக்கு வரிவிலக்கு எதுவும் கிடைக்காது. இதில் தனிநபருக்கு வரி விதிக்கப்படுகிறது. |
முதலீடு செய்ய பொருத்தமானவர்கள் | இது பழமைவாத மற்றும் ஆக்கிரமிப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. | இது பழமைவாத முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. |
பொதுவாக முதலீடு செய்வது அல்லது சேமிப்பது என்பது மிகவும் நல்ல ஒரு செயல் ஆகும். ஆனால் நாம் எத்தகைய முதலீட்டு முறையை தேர்வு செய்கின்றோம் என்பதில் தான் நமது முதலீடு முழுமை அடைகிறது.
அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்யப்போகும் முதலீட்டு முறையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
மாதாந்திர வருமானத் திட்டம் Vs பிக்சட் டெபாசிட் இவ்விரண்டில் முதலீடு செய்ய எது ஏற்றது
RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |