SBI Bank-ல் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் போதும் மாதந்தோறும் நல்ல வருமானம் பெறலாம்..!

Best Investment Plan For Monthly Income

அனைவருக்குமே வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரத்தில் இன்பமும் மற்றும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கையாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது அனைவருடைய வீட்டிலும் நினைப்பது என்னவென்றால் ஒருவருடைய சம்பளத்தையாவது நாம் கட்டாயமாக சேமிக்க வேண்டும் என்பது தான். ஏனென்றால் இது மாதிரி முதலீடு திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையினை Investment செய்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை நமக்கு பிடித்த நேரத்தில் வாழ்வதற்கு உதவியானதாக இருக்கும். சரி நாம் முதலீடு செய்யலாம் என்றால். எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது அடுத்த ஒரு குழப்பாக இருக்கிறது.  ஆகவே உங்களுக்கு உதவும் வகையில் இன்று SBI Bank-ல் உள்ள ஒரு திட்டத்தின் மூலம் நாம் எப்படி முதலீடு செய்து குறிப்பிட்டு தொகையை பெறுவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ இப்படி முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்..!

முதலீடு செய்வது எப்படி..?

முதலீடு செய்வது எப்படி

நாம் ஒவ்வொருவரும் வைத்து இருக்கும் வங்கி கணக்கின் பட்டியலில் SBI வங்கி கணக்கும் கட்டாயமாக இருக்கும். அப்படி நாம் அனைவருக்கும் தெரிந்த SBI Bank தற்போது Annuity Deposit என்ற ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டமானது Deposit செய்ய உள்ள வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதலில் SBI வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த தொகையினை மாதந்தோறும் தவணை முறையில் அசல் மற்றும் அதனுடன் வட்டியும் சேர்த்து குறிப்பிட்ட தொகையினை SBI வங்கி வாடிக்கையாளருக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.

Annuity Deposit கீழ் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் 120,84,60 மற்றும் 36 இந்த நான்கு தவணை முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்களுக்கு இதன் கீழ் மாதந்தோறும் பணம் வரும்.

இந்த திட்டமே SBI வங்கி புதிதாக அறிமுகம் செய்துள்ள Annuity Deposit திட்டம் ஆகும்.

பணத்தை திரும்ப பெறும் முறை:

 best investment plan for monthly income in tamil

நீங்கள் பணத்தை முதலீடு செய்த பிறகு அதனை அந்த மாதம் கடைசி 30-ஆம் தேதி அல்லது அடுத்த மாதம் 1-ம் தேதியில் இருந்து தவணை முறையில் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் இருந்து வட்டியும் சேர்த்து உங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும்.

ஒருவேளை முதலீடு செய்த நபர் இறந்துவிட்டால் அவர்களுடைய குடுபத்தினருக்கு அந்த Premium Amount இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதன் கீழ் நீங்கள் Deposit செய்வதன் மூலம் உங்களுக்கு மாதந்தோறும் நீங்கள் முதலீடு செய்த தொகை இல்லாமல் அதனுடன் சேர்த்து வட்டியும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
130 ரூபாய் முதலீடு செய்தால் 11 லட்சம் வரை கிடைக்கும்..! நல்ல திட்டம் அல்லவா உடனே Investment பண்ணிடுங்க..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு