Systematic Withdrawal திட்டம் என்றால் என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

Advertisement

Systematic Withdrawal Plan in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் Systematic Withdrawal திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டு நிறுவனம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதில் முதலீடு செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதும் நமக்கு தெரியும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பல திட்டங்கள் உள்ளன. அதில் SWP என்று சொல்ல கூடிய Systematic Withdrawal திட்டத்தை பற்றி இந்த பதிவின் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

சிஸ்டமேட்டிக் பணமெடுத்தல் திட்டம்:

SWP என்ற Systematic Withdrawal Plan என்பது தனி நபர்களின் முதலீட்டு காலம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதை கணக்கிட உதவும் ஒரு கருவி என்று கூறலாம். இந்த SWP என்பது தமிழில் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

இந்த SWP என்பது முறையான திரும்ப பெறும் திட்டம் என்று சொல்லப்படுகிறது.  இது அலகுகள் அல்லது முதலீட்டை மீட்டெடுப்பதற்கான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீடுகளை திரும்ப பெறமுடியும்.

பொதுவாக நிலையான வருமானத்தை தேடும் நபர்களுக்கு இந்த SWP பொருத்தமாக இருக்கும். அதாவது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் மொத்தமாக முதலீடு செய்து அதன் மூலம் மாதம் மாதம் வருமானம் வர வேண்டும் என்று நினைத்தால் இந்த SWP திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த Systematic Withdrawal திட்டத்தில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் இருக்கிறது.

SWP திட்டத்தின் நன்மைகள்: 

  1. இந்த SWP திட்டத்தில் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த தொகையையும் முதலீடு செய்ய வேண்டும்.
  2. சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தின் படி நீங்கள் முதலீடு செய்த அந்த தொகையை குறிப்பிட்ட இடைவெளியில் அதாவது ஒரு வருடத்திற்கு 1 முறை அந்த தொகையை பெற முடியும்.
  3. மேலும் நீங்கள் பெற வேண்டும் என்று விரும்பும் தொகையை நீங்களே தேர்வு செய்யலாம். அதுமட்டுமில்லாமல், இதன் மூலம் உங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்ளவும் முடியும்.
  4. SWP திட்டத்தின் மூலம் நீங்கள் தேர்வு செய்த தொகை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
  5. மேலும், இந்த திட்டத்தில் மூலம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு தேவையான தொகையை பெற முடியும்.
  6. உங்களிடம் இருக்கும் தொகையை மொத்தமாக முதலீடு செய்து பின் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு தேவையான தொகையை பெற்று கொள்ள முடியும்.
ஓவர்நைட் ஃபண்ட் என்பது என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement