Investment in Tamil
வணக்கம் வாசகர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே தினமும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் என்ன பயன். அந்த பணம் நமக்கு கடைசி வரை நிலைக்கவில்லையே என்று பலரும் சொல்லி புலம்புகிறார்கள். அதனால் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படி சேமிப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அது பிற்காலத்தில் நமக்கு பெரிய தொகையை வருமானமாக தரும். அதனால் தான் இன்று பலரும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். சரி இப்போது நீங்கள் முதலீடு செய்ய போகிறீர்களா..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
பொதுவாக நம்மில் பலருக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதேசமயம் இதில் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
ஒருவருக்கு 30 வயது என்பது முதலீடு செய்யும் வயது தான். சரி இப்போது நீங்கள் 10 ஆயிரம் முதலீடு செய்ய போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்படி முதலீடு செய்யும் பணத்தில் இருந்து 65 சதவீதத்தை பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். இது பங்குச்சந்தை, மியூட்சுவல் பண்ட் போன்ற எந்த நிறுவனமாக இருந்தாலும் அதில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
மேலும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால், இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும் Mutual Fund -ல் முதலீடு செய்பவரா நீங்கள்.. அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..
அதுபோல பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது ரொம்ப அவசியம்.
மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
- உங்கள் தேவைகள் மற்றும் இலக்குகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட முதலீட்டை எவ்வளவு காலம் தொடர விரும்புகிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
- அடுத்து முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கவும்.
- கட்டணங்களைச் சரிபார்க்க வேண்டும்.
- உங்கள் முதலீடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பிக்சட் டெபாசிட் Vs சேமிப்பு கணக்கு.. இதில் முதலீடு செய்ய எது சிறந்தது |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |