எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் வேண்டாம்..! அதிக பணத்தை தரக்கூடிய டாப் 3 முதலீடுகள் இதோ..!

Advertisement

Top 3 Investment Options in India

இன்றைய காலத்தை பொறுத்தவரை பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதனால் நாம் அனைவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணமானது குறைவாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் கூட அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பங்கினை சேமித்து வைக்க வேண்டும். சேமிக்கும் பழக்கம் ஆனது ஆரம்பித்திலேயே இருந்தால் மட்டுமே நம்முடைய எதிர்காலத்திற்கு பயனளிக்கும் விதமாக இருக்கும். அவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்றவுடன் நமக்கு எதில் முதலீடு செய்வது என்ற ஒரு கேள்வி தோன்றும். இத்தகைய கேள்விக்கான பதிலாக இன்றைய பதில் டாப் 3 முதலீடு சந்தைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பதிவை படித்து அதில் உள்ள தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிறந்த முதலீடு எது:

முதலீடு என்பது நாம் சேமிக்கும் பணத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இரட்டிப்பாக கொடுக்கும் ஒரு முறை ஆகும். ஆனால் இதில் சில நேரத்தில் ஒரு சில ஏற்ற இறக்கங்களும் காணப்படலாம்.

இதில் சிறந்த மூன்று முதலீடுகளை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Rental Investment
  2. Mutual fund
  3. Equity Investment

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி

Rental Investment (வாடகை முதலீடு):

Rental Investment

ஒரு நபர் ஒரு வீடு அல்லது காலனி, அப்பார்ட்மெண்ட் இதுபோன்ற முறைகளில் முதலீடு செய்து வீடுகளை கட்டிய பிறகு அதனை வாடகைக்கு விடுவதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். இத்தகைய முறையில் முதலீடு செய்வதே Rental Investment எனப்படும்.

ஏனென்றால் நாம் முதலீடு செலுத்தி கட்டும் வீடுகளின் மூலமாக நாம் நீண்ட கால வருமானத்தை பெறலாம். இதில் அதிக நஷ்டம் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆனால் இதற்கான இடம், வீட்டிற்கான அளவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் நன்கு கண்காணித்து திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம்.

Mutual fund:

Mutual fund

மியூச்சுவல் பண்ட் என்பது முதலீடு செய்யும் நபர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று சேமிக்கும் ஒரு முறை ஆகும். இதில் பணம் மட்டும் இல்லாமல் பத்திரங்கள் மற்றும் தங்க நகைகளும் மூலமாகவும் சேமிக்க உகந்ததாக இருக்கிறது.

இதில் நாம் முதலீடு செய்வதன் மூலம் நாம் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு நிலையான வருமானத்தை பெற முடியும். மேலும் மியூச்சுவல் பண்ட் என்பது ஒரு நம்பகமான முதலீடு ஆகும்.

மேலும் இதில் நாம் செய்யும் முதலீட்டில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேபோல் டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள் மற்றும் வருமான நிதிகள் இவை மூன்றும் முதலீட்டாளருக்கு சிறந்ததாக இருக்கிறது.

போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா 

Equity Investment (பங்குகளில் முதலீடு):

Equity Investment

நாம் ஒரு பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக செய்யும் முதலீடு பணமே Equity முதலீடு எனப்படும். இத்தகைய முதலீடு ஆனது நீண்ட கால மற்றும் நிலையான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீடாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ப்ளூ சிப் பங்குகளில் (Blue Chip Stocks) முதலீடு செய்வது முதலீடு செய்யும் நபருக்கு சிறந்த மற்றும் நஷ்டம் இல்லாத பணத்தினை அளிக்கிறது.

எனவே உங்களுக்கு எது சிறந்த முதலீடாக தோன்றுகிறதோ அதில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் தகுதிகளுக்கு உட்பட்டு முதலீடு செய்வதே முக்கியமாக கருதப்படுகிறது.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement