Savings And Investment in Tamil
வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சேமிப்பு என்பது நம் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் ஆகும். நம் எதிர்காலத்தின் நன்மைக்காக ஒவ்வொருவரும் பணத்தை கட்டாயம் சேமிக்க வேண்டும். அதேபோல நாம் சேமிக்கும் பணத்தை முதலீடு செய்தால் அது பல மடங்கு நல்ல வருமானத்தை கொடுக்கும். அந்த வகையில் இன்று நாம் சேமிப்பது நல்லதா..? இல்லை முதலீடு செய்வது நல்லதா..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் சேமிப்பு திட்டங்கள் உங்களுக்காக |
சேமிப்பு மற்றும் முதலீடு:
சேமிப்பு: உங்களிடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் ஒரு செயல் முறையாகும். நீங்கள் சேமிக்கும் பணமானது எதாவது ஒரு அவசர காலத்தில் உங்களுக்கு ஓரளவிலான தொகையை உங்களுக்கு தந்து உதவும்.
முதலீடு: இலாபத்தை எதிர்பார்த்து நாம் சேமித்த பணத்தை ஏதாவதொரு பொருளாதார முயற்சியில் போடுவதை முதலீடு என்று கூறுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அது பல மடங்கு வருமானத்தை கொடுக்கும்.
சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..?
நாம் பணத்தை சேமிப்பது அவசர காலத்தில் சேமித்த பணம் மட்டுமே நம் கையில் கிடைக்கும். அதே நேரத்தில் பணத்தை சேமிப்பதற்கு பதிலாக அந்த பணத்தை முதலீடு செய்தால் அதனால் நல்ல பல மடங்கு லாபம் கிடைக்கும்.
பணத்தை சேமிக்காமல் முதலீடு செய்தால் அந்த பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்லும்.
அந்த காலத்தில் முதலீடு செய்வதற்கு போதிய வசதிகள் இல்லை. அதனால் தான் பணத்தை சேமித்து வைத்தார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன.
பணத்தை வங்கிகளில் சேமிப்பதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அது அவசர காலம் அல்லது ஓய்வு காலத்தில் நினைத்ததை விட பல மடங்கு லாபத்தை கொடுக்கும்.
நாம் ஓவ்வொரு மாதமும் வங்கியில் நம் தொகையை சேமிப்பதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிறுவனத்தில் அந்த தொகையை முதலீடு செய்தால் அது 10 அல்லது 20 வருடத்திற்கு பிறகு நாம் எதிர்பார்க்காத அளவிற்கு லாபத்தை கொடுக்கும்.
பணத்தை பல மடங்கு பெருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் சேமிப்பதை விட்டு முதலீடு செய்யுங்கள். நம் பணத்தை சேமிப்பதை விட முதலீடு செய்வதே நல்லது.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |