நீங்கள் அஞ்சலகத்தில் செய்யும் முதலீட்டுக்கு அஞ்சலகத்தை விட அதிகம் வட்டி எந்த வங்கியில் கிடைக்கிறது..!

which bank has the best fixed deposit interest rate in tamil

வட்டி அதிகம் கிடைக்கும் வங்கி

நண்பர்களே வணக்கம்.! பொதுவாக நாம் பணத்தை சம்பாதிக்க வழிகளை தேடுவோம். ஆனால் அதனை எப்படி செலவு செய்வது அந்த பணத்தை எப்படி பெருக்குவது என்ற எந்த ஒரு ஐடியாவும் இருக்காது.

ஆனால் இரு சிலர் வங்கியில் முதலீடு செய்வார்கள் இன்னும் சிலர் போஸ்ட் ஆபிசில் முதலீடு செய்வார்கள். நாம் முதலீடு செய்வது எதற்காக நம்முடைய பணத்தை அதிகப்படுத்தி அதிலிருந்து பணத்தை சேமிக்க தான். ஆனால் அதில் குறைந்தளவு வட்டி கிடைத்தால் அது நமக்கு பயன் இல்லை ஆனால் வட்டி அதிகம் கிடைத்தால் நமக்கு பலன் ஆகையால் பணத்தை முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது தெரிந்துகொள்ளவும். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸை விட அதிக வட்டி தரும் வங்கியை பார்ப்போம்..!

Fixed Deposit Benefits in Tamil:

பிக்சட் டெபாசிட் செய்தால் அதில்  நமக்கு கூடுதல் பாதுகாப்பாக இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளதால் மக்களிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளது. பிக்சட் டெபாசிட் என்பது பாதுகாப்பாக இருந்தாலும் வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. அந்த வகையில் எந்த வங்கிக்கு எவ்வளவு வட்டி என்பதை இங்கு  பார்ப்போம் வாங்க..!

Fixed Deposit Interest in Post Office: 

அஞ்சலகத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் ஒரு வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.5% ஆகா உள்ளது. அதுபோல் 2 ஆண்டு திட்டத்திற்கு 5.7%, 3 ஆண்டு திட்டத்திற்கு 5.8%, 5 ஆண்டு திட்டத்திற்கு 6.7% வட்டி கிடைக்கிறது.

Fixed Deposit Interest in SBI in Tamil:

SBI வங்கியில் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.9% விகிதம் வரையில் கிடைக்கிறது. அதேபோல் 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் 6.7% ஆகும்.  அதன் பின் 5 ஆண்டு மற்றும் 6 ஆண்டுகள் வட்டி விகிதம் 6.9% வட்டி கிடைக்கும்.

அதனைவிட முக்கியமான திட்டம் உள்ளது அது வீ கேர் திட்டத்தில் 5 – 10 ஆண்டுகளுக்கு 7.2% வட்டி கிடைக்கிறது.

Fixed Deposit Interest in Bank of Baroda in Tamil:

பாங்க் ஆப் பரோடாவின் வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.9% விகிதம் கிடைக்கிறது. 2 வருடத்திற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு 6.75% வட்டி விகிதம் கிடைக்கிறது. 5 மற்றும் 10 வருடங்களுக்கு 6.9% விகிதம் கிடைக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 100 ரூபாய் முதலீடு செய்யலாம்..! எந்த அஞ்சல் நிலையத்திலும் தொடங்க முடியும்..!

Fixed Deposit Interest in Punjab National Bank in Tamil:

1.1/2 வருஷத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 7.5% கிடைக்கும். அதுபோல் 1 மற்றும் 2 வருடத்திற்கு 6.8%, 2 மற்றும் 3 வருடத்திற்கு 6.75%, 5 மற்றும் 10 ஆண்டுகளில் 6.9% வட்டி கிடைக்கிறது.

Fixed Deposit Interest in Canara Bank in Tamil:

கனரா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு 1.3/4 வருடத்திற்கு 7.5% வட்டியும். 1 மற்றும் 3 வருடத்திற்கு 6.75% வழங்குகிறது. மேலும் 3 மற்றும் 10 வருடத்திற்கு 7% வட்டி கிடைக்கிறது.

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்முதலீடு