Post Office FD vs SBI FD in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆஃபீஸ் FD திட்டத்தில் முதலீடு செய்தல் சிறந்ததா..? அல்லது SBI வங்கியில் FD திட்டத்தில் முதலீடு செய்தல் சிறந்ததா..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். அனைவருக்குமே பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இருக்கும் வண்ணம் எதில் சேமித்து வைந்தால் அதிக லாபம் பெறலாம் என்ற குழப்பமும் இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் FD திட்டத்திற்கு போஸ்ட் ஆஃபிஸ் சிறந்ததா..? அல்லது SBI வங்கி சிறந்ததா..? என்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
Which FD is Better SBI or Post Office in Tamil:
Fixed Deposit Amount Range in Tamil:
SBI வங்கி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் FD திட்டம் இரண்டிலும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.Fixed Deposit Tenure in Tamil:
SBI வங்கி பல்வேறு விதமான கால அளவில் FD திட்டத்தை வழங்குகிறார்கள்.
போஸ்ட் ஆஃபீஸ், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கால அளவில் FD திட்டத்தை வழங்குகிறார்கள்.
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது |
SBI Bank FD Interest Rate in Tamil:
SBI வங்கியில், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வகையான வட்டி விகித்தை வழங்குகிறார்கள்.
கால அளவு | பொது மக்கள் (60 வயதிற்கும் குறைவான) | மூத்தகுடிமக்கள்(60 வயதிற்கும் அதிகமான) |
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.50% | 4% |
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை | 5.50% | 6% |
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை | 6.25% | 6.75% |
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை | 6.50% | 7% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6.80% | 7.30% |
2 வருடம் முதல் 3 வருடம் வரை | 7% | 7.50% |
3 வருடம் முதல் 5 வருடம் வரை | 6.75% | 7.25% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.50% | 7.50% |
Post Office FD Interest Rate in Tamil:
போஸ்ட் ஆஃபிஸில் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் ஒரே அளவில் தான் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
கால அளவு | வட்டி விகிதம் |
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை | 6.90% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 7% |
2 வருடம் முதல் 3 வருடம் வரை | 7.10% |
3 வருடம் முதல் 5 வருடம் வரை | 7.50% |
5 வருட கால அளவில் SBI வங்கியில் FD திட்டத்தில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் பெறலாம்..?
டெபாசிட் தொகை | பொதுமக்கள் | மூத்தகுடிமக்கள் | ||
வட்டி விகிதம் | மொத்த தொகை | வட்டி விகிதம் | மொத்த தொகை | |
1 லட்சம் | ரூ.38,042/- | ரூ.1,38,042/- | ரூ.44,995/- | ரூ.1,44,995/- |
5 வருட கால அளவில் போஸ்ட் ஆபிஸில் FD திட்டத்தில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் பெறலாம்..?
டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | பெறக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் | ரூ. 44,995/- | ரூ.1,44,995/- |
இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது SBI வங்கியின் FD திட்டமானது சிறந்ததாகும்.
போஸ்ட் ஆபிஸ் TD (Vs) SBI வங்கியின் FD முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா..? |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |