PPF vs SSY இவற்றில் முதலீடு செய்ய எது சிறந்தது.?

Advertisement

PPF or SSY Which is Better

மனிதனாக பிறந்த அனைவருக்குமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். இப்போதிலிருந்து சேமித்தால் தான் எதிர்காலத்தில் ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே, அனைவருமே தாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியிலோ அல்லது பிற முதலீட்டு நிறுவனங்களிலோ சேமிக்க விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல் இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று தேடி தேடி முதலீடு செய்வார்கள். எனவே, அந்த வகையில் இப்பதிவில் PPF vs SSY -க்கும் என்ன வித்தியாசம்.? இவை இரண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.? போன்ற விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

PPF என்றால் என்ன.?

 ppf or ssy which is better

PPF- Public Provident Fund

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும்.இது அதிக வட்டி விகிதத்தை அளித்து முதலீடு செய்த தொகைக்கு வருமானத்தையும் வழங்குகிறது. மேலும், கிடைக்கும் வட்டி தொகை மற்றும் வருமானத்திற்கு வருமான வரியின் கீழ் வரி விதிக்கப்படாது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளிலும்  தபால் நிலையங்களிலும் PPF கணக்கை திறக்கலாம்.

PPF VS VPF இரண்டில் எது அதிக வருமானம் தரும்..

SSY என்றால் என்ன.?

 ppf or ssy which is better

SSY- Sukanya Samriddhi Yojana

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்திய அரசின் ஒரு சேமிப்பு திட்டமாகும், இது இந்தியாவில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் இதர செலவுகளுக்காக நிதியை உருவாக்க உதவுவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

SSY கணக்கை ஒரு பெண் குழந்தையின் பெயரில் மட்டுமே திறக்க முடியும். 

Difference Between PPF and SSY in Tamil:

வேறுபாடுகள் PPF SSY
வட்டி விகிதம்  7.10% 8.00%
வயது தகுதி  15 வயது முதல்  பிறந்தது முதல் 
குறைந்தபட்ச டெபாசிட் தொகை  500 ரூபாய்  250 ரூபாய் 
அதிகபட்ச டெபாசிட் தொகை  1,50,000 ரூபாய்  1,50,000 ரூபாய் 
பதவி காலம் 15 ஆண்டுகள்  21 ஆண்டுகள் 
திரும்ப பெறுதல்  5 ஆண்டுகளுக்கு பிறகு  18 வயதிற்கு பிறகு 
கடன் வசதி  உண்டு  இல்லை 

 

Which is Best PPF or SSY in Tamil:

எனவே, மேலே அட்டவணையில் கூறப்பட்டுள்ள விவரங்களின் படி, இரண்டு சேமிப்பு திட்டங்களும் அதிக நன்மையை அளிக்கின்றன. இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தை விட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் அதிக அளவில் வட்டியினை வழங்குகிறது.

இருப்பினும் நீங்கள் கடன் பெற விரும்பினாலோ அல்லது குறுகிய பதவிக்காலத்தை விரும்பினாலோ PPF திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு அதிக வட்டியை பெறவேண்டும் என்று நினைத்தால் SSY திட்டம் உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும். அதுவே, நீங்கள் கடன் மற்றும் குறுகிய கால அளவை விரும்பினால் PPF திட்டம் சிறந்த ஒன்றாக இருக்கும்.

RD Vs PPF இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது தெரியுமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement