FD vs Real Estate in Tamil
அனைவருமே நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவதொரு சேமிப்பு திட்டங்களில் சேமிக்க நினைப்போம். நாம் சேமிப்பதற்கு ஏற்றவாறு இக்காலத்தில் சேமிப்பதற்கு அதிக நிறுவனங்கள் உள்ளது. ஆனால் எதில் முதலீடு செய்வது என்பது அனைவரின் குழப்பமாக இருக்கிறது. அதாவது எதில் நாம் முதலீடு செய்தால் அதிக லாபத்தை பெறலாம் என்பது குழப்பமாகவே இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நீங்கள் FD அல்லது ரியல் எஸ்டேட்டில் சேமிக்க விரும்பினால் எது உங்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
FD என்றால் என்ன.?
ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) என்பது வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் வழங்கப்படும் ஒரு நிலையான சேமிப்பு திட்டமாகும்.
இத்திட்டத்தில் நீங்கள் ஒரு முறை டெபாசிட் செய்து முதிர்வு காலம் வரையிலும் அதற்கான வட்டித்தொகையை பெறலாம்.
முக்கியமாக இத்திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையினையும் அதற்கான வட்டித்தொகையினையும் பாதுகாப்பான முறையில் பெற்று கொள்ளலாம்.
பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படுவதால் நீங்கள் முறையான கால அளவை தேர்வு செய்து டெபாசிட் செய்ய வேண்டும்.
எனவே நீங்கள் FD திட்டத்தை விரும்பினால் வங்கி FD, போஸ்ட் ஆஃபீஸ் FD, NBFC FD போன்ற பல்வேறு விருப்பங்களைத் ஒப்பிட்டுப் பார்த்து எதில் அதிக வட்டி வழங்கப்படுகிறதோ அதில் டெபாசிட் செய்து பயனடையலாம்.
FD Vs PPF முதலீடு செய்வதற்கு எது சிறந்தது..?
ரியல் எஸ்டேட் என்றால் என்ன.?
ரியல் எஸ்டேட் சொத்துக்களை முதலீட்டுக் கருவியாகப் பயன்படுத்தி அதன் மூலம் அதிக லாபத்தை பெறுவது ஆகும். முதலீடு என்பது வீடு, மனை, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதைக் குறிக்கிறது.
நீங்கள் வாங்கிய கட்டிடத்தை வாடகைக்கு வைத்து இரண்டாம் நிலை வருமானம் பெறலாம். இதன் மூலம் நீங்கள் மாத வாடகையை வருமானமாக பெறுவீர்கள்.
அதுமட்டுமில்லாமல் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க ரியல் எஸ்டேட்டின் வருமானமும் அதிகரிக்கும்.
ஆனால் இதற்கான லாபம் என்பது எப்போது அதிகமாகும் எப்போதும் குறையும் என்பதே
ரியல் எஸ்டேட் VS ஃபிக்ஸ்டு டெபாசிட் எது சிறந்தது.?
நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியை பாதுகாப்பான முறையில் மற்றும் பெற விரும்பினால் ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) சிறந்ததாக அமையும்.
இதுவே உங்களுக்கு அதிகமான லாபம் வேண்டுமானால் ரியல் எஸ்டேட் சிறந்ததாக இருக்கும். அதாவது நீங்கள் முதலீடு செய்த சொத்திலிருந்து நீண்ட காலத்திற்கு நல்ல லாபத்தை பெற முடியும். ஆனால் நில மதிப்புகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் நேரங்களில் உங்களுக்கான லாபமும் குறைந்து தான் இருக்கும். எனவே முதலீடு செய்வதற்கு ரியல் எஸ்டேட் சிறந்த ஒன்றாக இருந்தாலும் அதற்கான உத்திரவாதத்தையும் பாதுகாப்பினையும் பெற முடியாது.
அதேபோல் ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தால் முதலீடு செய்வதற்கு ரியல் எஸ்டேட் சிறந்த ஒன்றாக இருக்கும்.
தபால் துறை RD vs இந்தியன் வங்கி RD எதில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக கிடைக்கும்..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |