Which is Better NPS or Mutual Fund
நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் முதலீடு பற்றியும் சேமிப்பு பற்றியும் நிறைய செய்திகளை கேள்வி பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக மியூச்சுவல் பண்ட் பற்றியும் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டங்கள் பற்றியும் அளவுக்கு அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய திட்டங்களை பற்றி தெரியாமல் இருப்பவர்களுக்கும் தெரிய படுத்திருப்போம். அதுவே நாம் இத்தகைய திட்டத்தில் சேர வேண்டும் என்று முடிவு செய்தால் மட்டும் ஒன்றுக்கு பல முறை யோசித்து செயல்படுவோம். அதுமட்டும் இல்லாமல் ஒரு திட்டத்துடன் மற்றொன்றையும் ஒப்பிட்டு பார்ப்போம். அத்தகைய வரிசையில் NPS Tier 2 or Mutual Fund இரண்டில் எதில் சிறந்தது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
தேசிய ஓய்வூதிய திட்டம்:
NPS என்ற திட்டத்தின் தமிழ் விரிவாக்கம் தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகும். அனைத்து விதமான மக்களும் மற்றும் தொழிலார்களும் நீண்ட கால முதலீட்டினை பெற வேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு திட்டமே தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தினை நீங்கள் வங்கியிலோ அல்லது போஸ்ட் ஆபீஸிலேயோ தொடங்கி சேமிக்கலாம்.
மேலும் இந்த முற்றிலும் எதிர்காலத்தில் நல்ல தொகையினை பெறக்கூடிய ஒன்றாக உள்ளது.
Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா
மியூச்சுவல் ஃபண்ட்:
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு பாதுக்கான மற்றும் அங்கீகரிக்க கூடிய ஒரு முறை ஆகும். இதில் பணம், பத்திரம் மற்றும் தங்க நகைகள் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யாலாம்.
மேலும் இந்த முதலீடு அம்சம் ஆனது குறிப்பிட்ட பெரிய அளவினை தொகையினை முதலீடு செய்வோருக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் Vs தேசிய ஓய்வூதிய திட்டம் இரண்டிற்கு இடையே உள்ள வேறுபாடு:
மியூச்சுவல் ஃபண்ட் | தேசிய ஓய்வூதிய திட்டம் |
இதில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 500 ரூபாயாகும். | NPS முதலீடு திட்டத்திற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் ஆகும் |
18 வயது பூர்த்தி அடைந்த மக்கள் அனைவரும் இதில் சேரலாம். | இதில் 25 வயது நிரம்பிய மக்கள் அனைவரும் சேரலாம். |
இதில் ELSS பரஸ்பர நிதிகளுக்கு 3 ஆண்டுகள் Lock in Period கொடுக்கப்பட்டுள்ளது. | ஆனால் இந்த திட்டத்தில் நீங்கள் ஓய்வு பெரும் வரை Lock in Period கொடுக்கப்பட்டுள்ளது. |
மியூச்சுவல் பண்ட்டில் அதிக ஏற்றம் இரக்கம் காணப்படும். மேலும் இது நிலையான பாதுகாப்பினை வழங்குவது இல்லை. | தேசிய ஓய்வுதிய திட்டத்தில் அதிகமாக ஏற்றம் இரக்கம் இருக்காது. அதேபோல் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. |
வரி விலக்கு உண்டு. | இதிலும் உங்களின் தொகைகளுக்கு ஏற்றவாறு வரி விலக்கு உண்டு. |
நீண்ட கால முதலீடு திட்டம். | குறுகிய கால முதலீடு திட்டம். |
NPS or Mutual Fund எது சிறந்தது:
மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் மட்டும் இல்லாமல் மற்ற அனைத்தினையும் ஒப்பிட்டு தான் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் நீங்கள் அளவில்லா நீண்ட கால முதலீட்டை பெற வேண்டும் என்றால் மியூச்சுவல் பண்ட் சிறந்ததாகும்.
அதுவே குறுகிய கால முதலீட்டினை பெற வேண்டும் என்றால் அதற்கு தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்தது ஆகும்.
FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |