தபால் துறையில் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் Lic-யின் ஆயுள் காப்பீடு திட்டம் இரண்டில் எது சிறந்தது..?

Advertisement

Which is Better Postal Life Insurance or Lic  

பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய தேவைக்கு போக மீதம் இருக்கும் பணத்தினை எதிர்கால வாழ்க்கைக்காக சேமித்து வருவோம். அத்தகைய சேமிப்பினை நம்முடைய அல்லது நம் குடும்பத்தில் உள்ள நபரின் பெயரில் முதலீடு செய்து சேமித்து வருவோம். அதிலும் சிலர் எந்த இடத்தில் வட்டி அதிமாக உள்ளது என்று ஆலோசனை செய்து அதன் பிறகு தான் முதலீடு செய்யவே முன் வருவார்கள். இவ்வாறு வட்டி எவ்வளவு உள்ளது என்று விசாரித்தால் மட்டும் போதாது. ஏனென்றால் ஒரு திட்டத்தின் வட்டியினை மட்டும் பார்க்கலாம் வேறொரு திட்டத்துடன் அனைத்தினையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று தபால் துறையில் உள்ள ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் Lic-யின் ஆயுள் காப்பீடு திட்டம் இரண்டில் எது சிறந்தது என்று தெரிந்துக்கொண்டு அதில் முதலீடு செய்யலாம் வாருங்கள்.

SIP-யில் 5000 முதலீடு செய்து 6 கோடி பெறுங்கள்

Postal Life Insurance Vs Lic in Tamil:

போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ்:

இத்தகைய திட்டத்தின் கீழ் 50 வயதிற்குள் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் உங்களுடைய ஊரில் அருகில் உள்ள தபால் துறையில் சேர்ந்து கொள்ளலாம்.

போஸ்ட் ஆபீஸில் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களுக்கு வட்டி விகிதமாக 7% வரை வழங்கப்படுகிறது. அதுபோல இதில் உங்களுக்கான காப்பீட்டு தொகை ஆனது அதிகபட்சமாக 50,00,000 ரூபாய் அளிக்கப்படுகிறது.

மேலும் இத்தகைய திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையானது மிகவும் குறைந்த அளவாக தான் உள்ளது.

ஆனால் இத்தகைய திட்டமானது தபால் துறையில் முற்றிலும் குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்காக உருகாவப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த இன்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கான ஒன்றாக கருதப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பங்குசந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்வது சிறந்தது

Lic இன்சூரன்ஸ்:

Lic-யில் உள்ள இன்சூரன்ஸ் திட்டத்தில் இந்த குடியுரிமை பெற்ற நபர் யாராக இருந்தாலும் முதலீடு செய்யலாம். மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கான வயது    என்பது 75 வருடம் ஆகும்.

இதில் உங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 4.5% ஆகும். மேலும் இதில் உங்களுக்கான பிரீமியம் தொகை ஆனது அதிக அளவில் உள்ளது.

அதுபோல இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நிலையான தொகை என்றும் கிடையாது. உங்களுக்கு ஏற்ற மாதிரியான தொகையினை முதலீடு செய்து கொள்ளலாம்.

ஆகவே இத்தகைய இரண்டு திட்டங்களை  ஒப்பிட்டு பார்க்கும் போது தபால் துறையில் உள்ள இன்சூரன்ஸ் திட்டமே சிறந்த ஒன்றாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.10,000 முதலீட்டில் 3 கோடி அடைவது எப்படி..

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement