வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

NSC Vs PPF இவற்றில் முதலீடு செய்ய எது சிறந்தது.?

Updated On: June 16, 2023 1:06 PM
Follow Us:
Difference Between PPF and NSC in Tamil
---Advertisement---
Advertisement

Which is Better PPF or NSC  

மனிதனாக பிறந்த அனைவருமே இப்போதிலிருந்து சேமித்தால் தான் எதிர்காலத்தில் ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு அனைவருமே தாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியிலோ அல்லது பிற முதலீட்டு நிறுவனங்களிலோ சேமிக்க விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு பிறகு தான் முதலீடு செய்வார்கள். எனவே, அந்த வகையில் இப்பதிவில் PPF vs NSC -க்கும் என்ன வித்தியாசம்.? இவை இரண்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.? போன்ற விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

NSC திட்டம் என்றால் என்ன.?

NSC திட்டம் என்றால் என்ன

NSC- National Savings Certificate

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) என்பது இந்திய அரசாங்கத்தால் போஸ்ட் ஆபீஸ் மூலம் வழங்கப்படும் நிலையான வருமான திட்டமாகும். இத்திட்டம், இந்திய மக்களை அதிகமாக சேமிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

இத்திட்டத்தில் நீங்கள், முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு முதலீட்டிற்கு ஏற்ற வட்டியினை பெறலாம்.

NSC என்பது ஒரு நிலையான வட்டி திட்டமாகும். அதாவது, இத்திட்டத்தில் டெபாசிட் செய்த காலம் முதல் முதிர்வு காலம் வரை தொடர்ந்து நிலையான வட்டி விகிதங்களை பெறலாம்.

PPF vs SSY இவற்றில் முதலீடு செய்ய எது சிறந்தது.?

PPF என்றால் என்ன.?

 

PPF என்றால் என்னPPF- Public Provident Fund

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும்.இது அதிக வட்டி விகிதத்தை அளித்து முதலீடு செய்த தொகைக்கு வருமானத்தையும் வழங்குகிறது. மேலும், கிடைக்கும் வட்டி தொகை மற்றும் வருமானத்திற்கு வருமான வரியின் கீழ் வரி விதிக்கப்படாது.

PPF வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

Difference Between PPF and NSC in Tamil:

 

வேறுபாடுகள்

NSC

PPF
முதிர்வு காலம் 5 ஆண்டுகள், மேலும் நீட்டிக்க முடியாது  15 ஆண்டுகள், மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க முடியும்.
வட்டி விகிதம்  6.8% 7.1%
குறைந்தபட்ச டெபாசிட் தொகை  1000 ரூபாய்  500 ரூபாய் 
அதிகபட்ச டெபாசிட் தொகை  வரம்பு இல்லை 1.5 லட்சம்
திரும்ப பெறுதல்  முதிர்வு காலத்திற்கு பிறகே திரும்ப பெறமுடியும். ஆறுவருடத்திற்கு பிறகு திரும்ப பெறலாம்.
கடன் வசதி  பெற முடியாது. பெறலாம்.

 

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா..?

NSC Vs PPF இவற்றில் முதலீடு செய்ய எது சிறந்தது.?

எனவே மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையின் விவரங்களின் படி, நீங்கள் குறைந்த காலத்தில் சேமிக்க விரும்பினால், உங்களுக்கு NSC திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுவே, நீங்கள் செலுத்திய தொகைக்கு அதிக வட்டியையும் நீண்ட கால சேமிப்பையும் விரும்பினால் PPF திட்டம் உங்களுக்கு முதலீடு செய்வதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?