கடி ஜோக்ஸ் அறுவை | Kadi Jokes in Tamil With Answers New..!

Advertisement

கடி ஜோக்ஸ் அறுவை | Kadi Jokes in Tamil With Answers New..!

பொதுவாக நாம் அனைவரும் ஏதோ கஷ்டத்தில் இருந்தாலோ அல்லது மன அமைதி வேண்டும் என்று நினைத்தாலோ மனதிற்கு பிடித்த பாடல் மற்றும் ஜோக்ஸ் என கேட்டு கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்து கொள்வோம். அதிலும் சிலர் நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து நிறைய வகையான ஜோக்சினை சொல்லி கேலி கொள்வார்கள். ஆனால் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால காலகட்டத்தில் ஜோக்ஸ் கேட்பதை விட அதிகமாக அறுவை மற்றும் கடி ஜோக்சினை தான் கேட்போம். அதிலும் சிலர் யாரு வந்து மாற்றுவார்கள் என்று பார்த்து எல்லாம் அறுவை ஜோக்கினையும் அவர்களிடேமே சொல்லி பாடாய் படுத்துவார்கள். இதுபோன்ற ஜோக்ஸ்கள் கேட்பதற்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும் கூட நம்மை அறியாமலே சிரிப்பு வர வைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் இன்று உங்கள் அனைவரையும் மகிழ்விக்க கூடிய அறுவை கடி ஜோக்கினை தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் அது என்னென்ன ஜோக்ஸ் என்று படித்து பார்க்கலாம்..!

கடி ஜோக்ஸ் அறுவை

  1. முதலைக்கும், ஒட்டகத்திற்கும் Running Race வச்சா யாரு முதல்ல வருவாங்க தெரியுமா..?

விடை: முதலை தாங்க முதல்ல வரும்.

2. ஒருத்தர் Night-ல தூங்கும் போது கூட கண்ணாடி போட்டுக்கிட்டே தான் தூங்குவாரான் ஏன் தெரியுமா..?

விடை: ஏன்னா கனவுல எல்லாம் தெளிவா தெரியனும்ல அதுக்கு தான்.

3. ஒருத்தர் அவர் மனைவி வரும் போது எல்லாம் கண்ணாடி போட்டுப்பாரான் ஏன் சொல்லுங்க..?

விடை: ஏன்னா டாக்டர் தலைவலி வரும்போது எல்லாம் கண்ணாடி போட்டுக்க சொன்னாராம்.

4. ஒருவர் எப்போதும் அவருடைய வீட்டுக்கு சென்ட் அடிச்சுட்டே இருப்பாராம் ஏன்..?

விடை: ஏன்னா அது வியர்வை சிந்தி கட்டுன வீடாம்.

5. ஒரு குதிரை ரொபை பசியா இருக்கும் போது ஒரு தாத்தாவ போய் கடிச்சுடுச்சாம் ஏன் தெரியுமா..?

விடை: அவரு கொள்ளு தாத்தாவாம் அதனால கடிச்சுடுச்சாம்.

6. வெற்றிலையுடன் சேராத பாக்கு எது..?

விடை: மைசூர் பாக்கு.

7. கிணத்துக்குள்ள கல்லை போட்டா ஏன் மூழ்குது தெரியுமா..?

விடை: ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாதாம்.

8. ஒரு பையன் கடைக்கு போய் ஊசி வாங்கிட்டு வந்தானாம் ஆன அது திடீர்னு வெடிச்சுடுச்சாம் ஏன் தெரியுமா..?

விடை: ஏன்னா அவன் வாங்குனது குண்டு ஊசியாம்.

9. நம்ம ஏன் தண்ணீரை குடிக்குறோம்..?

விடை: தண்ணீய சாப்பிட முடியாதுல அதனால தான் குடிக்குறோம்.

10. கால் இல்லாத டேபிள் எது தெரியுமா..?

விடை: வேற எது டைம் டேபிள் தான்.

11. எலிக்கு ஏன் வால் இருக்கு தெரியுமா..?

விடை: வேற எதுக்கு செத்து போச்சுன்னா தூக்கி போடா தான்.

12. கிரிக்கெட் பாத்துட்டு இருந்த ஒரு கொசு செத்து போயிடுச்சாம் ஏன்..?

விடை: ஏன்னா இந்தியா டீம் All Out ஆகிடுச்சாம்.

13. இங்லீஸ் தெரிஞ்ச மாடு ஒன்னு படம் பாக்க தியேட்டருக்கு போனுச்சாம் ஆன திடீர்னு அங்க இருந்த கதவை கடிக்க ஆரம்பிச்சுடுச்சாம் ஏன்..?

விடை: அங்க இருந்த கதவுல Pull அப்டின்னு எழுதி இருந்துச்சாம்.

14. எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word எது தெரியுமா..?

விடை: வேற எது போஸ்ட் ஆபீஸ் தான். ஏன்னா அங்க தான எல்லா Letter-ம் வருது.

15. மீனுக்கு பிடித்த காய் எது..?

விடை: முள்ளங்கி தான். ஏன்னா அதுல தான முள் இருக்கு.

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ் 

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்க உங்க மனதில் உள்ள அனைத்து கவலையையும் மறந்து மனம்விட்டு சிரிப்பீங்க

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement