காமெடி ஜோக்ஸ் | Comedy Jokes in Tamil

Advertisement

Comedy Jokes in Tamil

இன்றைய காலத்தில் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வேலையில் இருக்கும் டென்சன் மற்றும் வீட்டில் இருக்கும் டென்சன் போன்றவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் மனம் விட்டு பேச வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் மற்றவர்களிடம் பேசுவதில்லை. நான்கு சுவற்றிற்குள்ளயே நாட்களை கழிக்கின்றார்கள்.

அதாவது மொபைலில் தான் நேரத்தை கழிக்கிறார்கள். மொபைலில் பாடல்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்து தங்களை மாற்றி கொள்கின்றார்கள். அதனால் தான் இந்த பதிவில் காமெடி ஜோக்சைகளை பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து படித்து விட்டு மனம் விட்டு சிரியுங்கள்.

காமெடி ஜோக்ஸ் கேள்வி பதில்:

1.குரைக்கிற நாய் கடிக்காது ஏன்?

விடை: ஒரே சமயத்தில் இரண்டு வேலையை செய்ய முடியாது..அதனால தான்.

2. offee ஏன் உடம்புக்கு நல்லது இல்ல?

விடை: ஏன்னா அதுல 2 “e” இருக்கு

3. ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?

விடை: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம்

4. தூங்குவதற்கு முன்னாடி ஏன் குட்நைட் சொல்றோம்?

விடை: தூங்குனதுக்கு அப்பறம் சொல்லமுடியாது அதனால

அம்மா மகன் ஜோக்ஸ்:

பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

அம்மா: விமலா டா…

பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய “டார்லிங்”னு கூப்புடுறார்….

நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறதுக்கு சில கடி ஜோக்ஸ்

ஆசிரியர் மாணவர் நகைசுவை:

டீச்சர்: கண்ணகி மதுரையை எரித்தாள்  இது என்ன காலம்?

மாணவர்: “FIRE SERVICE” இல்லாத காலம் Sir !’

நோயாளி மருத்துவர் ஜோக்ஸ்:

நோயாளி – ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க

டாக்டர் – ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ

நோயாளி – இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன்

நண்பர்கள் நகைச்சுவை:

கபிலன்: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை ?

கீர்த்திவாசன்: தெரிய‌லையேடா?

கபிலன்: இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.

தோழி நகைச்சுவை:

அர்ச்சனா: என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?

புனிதா : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.

இந்த கடிஜோக்ஸ் படித்து பாருங்க சிரிப்பை நிறுத்த முடியாது

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement