தமிழ் நகைச்சுவை தத்துவங்கள் | Comedy Quotes Images in Tamil
Comedy Quotes in Tamil: பொதுவாக நகைச்சுவை என்றாலே அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒன்று. மனதில் உள்ள கஷ்டம், குழப்பம் யாவும் நீங்க நகைச்சுவை பார்த்து மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வோம். மனதில் கஷ்டத்துடன் இருக்கும் போது வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து நகைச்சுவையாக பேசி சிரிப்பது இன்னும் மனதிற்கு ஆறுதல் நிலை கிடைக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தங்களுக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் மற்றும் காமெடி இமேஜஸ் தினமும் அப்டேட் செய்ய இருக்கிறோம். அதனால் மன பாரங்கள் நீங்க எங்களுடைய நகைச்சுவை தத்துவங்களை தினமும் படித்து மகிழ்ச்சியான வாழ்வை கடந்து வாருங்கள்..!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் நகைச்சுவை (Tamil QUOTES ), தமிழ் நகைச்சுவை, தமிழ் மொக்கை நகைச்சுவை (Tamil Mokka QUOTES ) என்று தங்களுக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் மற்றும் தமிழ் ஜோக்ஸ் படங்கள் என தினமும் பதிவு செய்ய உள்ளோம். எனவே எங்கள் ஜோக்ஸை தினமும் படித்து மகிழ்ச்சியுடன் சிரித்து வாழுங்கள். சரி வாங்க ஜோக்ஸ் படிக்கலாம்
| தமிழ் ஜோக்ஸ் |
Comedy Quotes Images in Tamil:
சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள்:

தமிழ் நகைச்சுவை தத்துவங்கள்:

நகைச்சுவை தத்துவங்கள்:

தமிழ் நகைச்சுவை:
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும்
சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட
முடியும்.
ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.
ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், ………. உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.
நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.
மண்ணிலிருந்து மண்ணெண்ணை எடுக்கலாம்,
கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா……………..?
Comedy Quotes Images in Tamil:

சில நகைச்சுவை தத்துவங்கள்:
இட்லி பொடியைத் தொட்டு
இட்லி சாப்பிடலாம்
ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு
மூக்கை சாப்பிட முடியாது.
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.
Short Funny Quotes in Tamil:
1.டீ ஸ்பூனால டீ கலக்கலாம், டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா..?
2. வாயால நாய்னு சொல்ல முடியும், ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.
3. அம்மா அடிச்சா வலிக்கும், போலீஸ் அடிச்சா வலிக்கும், பிரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும், ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
4. தண்ணியில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி.
5. என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.
6. குவாட்டர் அடிசிட்டு குப்புற படுக்கலாம், ஆனால் குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியாது.
நகைச்சுவை வரிகள்:
1.ஆசிரியர்: டேய் என்னடா… கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
2. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
3. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
4. அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா?
5. நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்…
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா.?
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |















