Funny Jokes in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனம் மிகவும் அமைதியை இழந்து மிகவும் சோர்வாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனதின் சோர்வை போக்கி அதனை மகிழ்ச்சிப்படுத்த நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது மேலும் ஒரு சிலர் ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நமது மனதில் உள்ள சோர்வை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!
Funny Jokes Questions in Tamil
- ஒருத்தர் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போயிட்டு போயிட்டு வறாரு ஏன்.?
விடை: ஏன்னா டாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னாராம்.
2. ஒரு கல்யாணத்துல மொய் வைக்க வந்த எல்லாருக்கும் கையில Bread கொடுத்தாங்கலாம் ஏன்..?
விடை: ஏன்னா அந்த கல்யாணம் நல்லா Jam Jam-னு நடந்துச்சாம்.
3. ஒருத்தனுக்கு Interview போறதுக்கே பிடிக்காதாம் ஏன்.?
விடை: ஏன்னா அவங்க அப்பாதான் நாலு பேரு கேள்வி கேட்குற மாதிரி நடந்துக்காதான்னு சொன்னாராம்.
4. ஒரு பையன் மழையில நினைஞ்ச பிறகு அவன் தலை வீங்கி இருந்துச்சாம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் கொட்டுற மழையில நினைஞ்சிட்டானாம்.
5. நாம் எதுக்கு குளிச்ச பிறகு ஏன் தலைய துவட்டுறோம்.?
விடை: குளிக்கும் போதே துவட்ட முடியாதுல அதான்.
6. கட்ட பொம்மனுக்கு எந்த இடத்தில் தூக்கு போட்டாங்க சொல்லுங்க.?
விடை: வேற எங்க கழுத்துல தான்.
7. டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது.?
விடை: Washing (Ton) தான்.
8. குறைகக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா.?
விடை: ஒரே சமயத்தில் இரண்டு வேலையை எப்படி செய்ய முடியும்.
9. ஒருத்தன் சர்க்கரை வாங்கிகிட்டு வந்தானாம். ஆனா 100g சர்க்கரை குறைஞ்சு இருந்துச்சாம் ஏன்.?
விடை: ஏன்னா நடந்து வந்த Sugar குறைஞ்சிடும்ல அதான்.
10. சாப்பிட முடியாது கனி எது.?
விடை: பால்கனி.
கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |