Funny Mokka Jokes in Tamil With Answers
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல கடி ஜோக்ஸ் படித்து மகிழ்ந்து இருப்பீர்கள். அதேபோல், இன்றைய பதிவில் மொக்க கடிஜோக்ஸ் பற்றித்தான் பார்க்க போகிறோம். ஒருவருக்கு என்னதான் மனக்கவலை, வேலை அழுத்தம் இருந்தாலும் கடிஜோக்ஸ் படித்தால் அவர் அவரையே மறந்து சிரித்து விடுவார்கள். எனவே சிரிப்பு என்பது ஒரு மருந்தாகவே இருக்கிறது. “வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும்” என்பது அனைவருக்கும் தெரியும். எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கடிஜோக்ஸ் படித்தால் மனஅழுத்தம் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஓகே வாருங்கள் நண்பர்களே இப்பதிவில் பின்வருமாறு அனைவரும் சிரிக்கும் வகையில் சில மொக்க கடிஜோக்ஸ் கொடுத்துள்ளோம். எனவே இவற்றை படித்து மகிழுங்கள்.
மொக்க கடிஜோக்ஸ்:
1.ரெண்டே ரெண்டு வார்த்தைகள் தெரிஞ்சா போதும், உலகத்துல எல்லா கதவையும் திறக்கலாம் தெரியுமா..? அது என்ன வார்த்தை..?
விடை: தள்ளு, இழு (Push, Pull)
2. யாராலையும் உடுத்த முடியாத பட்டு எது..?
விடை: செங்கல்பட்டு
3. ஒரு கடிகாரம் 13 தடவ மணி அடிச்சுச்சுனா அதற்கு அர்த்தம் என்ன.?
விடை: அத Repair பண்ண கொடுக்கனும்னு அர்த்தம்.
4. ஒருத்தனுக்கு மழையில நனஞ்சதுனால மண்டை வீங்கிச்சாம் ஏன்..?
விடை: ஏன்னா அவ கொட்டுற மழையில நனைஞ்சானாம்.
5. சுரேஷ் எப்ப சாப்பிட்டாலும் Fan -அ Off பண்ணிட்டுதான் சாப்பிடுவானாம் ஏன்..?
விடை: ஏன்னா அவன் வியர்வை சிந்தி சாப்பிடுறானா.
6. ஒருத்தன் வீட்டுக்கு வெளிய நின்னுட்டே Exam -க்கு படிச்சானாம் ஏன்..?
விடை: ஏன்னா அது Entrence exam -மா.
7. அனிதா எப்ப பாட்டு பாடுனாலும் கைல பாக்சிங் Gloves போட்டுட்டு தான் பாடுவாளாம் ஏன்..?
விடை: ஏன்னா அனிதா குத்து பாட்டு பாடுறா அதா.
8. ஒரு பையன் லீவ் முடிஞ்சும் ஸ்கூலுக்கு போக மாட்ரானாம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்குறானாம்.
9. ஒருத்தன் கேக் வாங்க பேக்கரிக்கு Passport எடுத்துட்டு போறானாம் ஏன்..?
விடை: ஏன்னா அது Plain கேக்காம்.
10. மயிலே மயிலே இறகு போடுன்னு சொன்ன போடாதாம் ஏன்.?
விடை: ஏன்னா மயிலுக்கு தான் தமிழ் தெரியாதுல.
11. ஒருத்தன் அடிக்கடி கிச்சனுக்கு போயிட்டு வரானாம்..? கேட்டா டாக்டர் தான் போக சொன்னாரு சொல்றான் ஏன்..?
விடை: ஏன்னா டாக்டர் அவன சுகர் இருக்கானு செக் பண்ண சொன்னாராம்.
12. ஒரு நாய் Daily ஒரு Train பின்னாடி ஓடிட்டே இருக்குமா ஏன்..?
விடை: முன்னாடி ஓடிச்சுனா செத்துடும்ல அதா பின்னாடி ஓடுது.
இதனை ஒரு முறை படித்தீர்கள் என்றால் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |