நா பிறழ் பயிற்சி | Funny Tongue Twisters in Tamil

Funny Tongue Twisters in Tamil

தமிழ் வாக்கியம் பயிற்சி | Tamil Tongue Twisters Funny

ஒரு சில பேருக்கு பேசுவதில் தடுமாற்றம் காணப்படும், உச்சரிப்பு சரியாக வராது, தெளிவாக பேச முடியாது அப்படிபட்டவர்களுக்கு பேச்சு, உச்சரிப்பு சரியாக வர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி தான் நா பிறழ் சொற்கள். இது போன்ற சொற்களை தொடர்ந்து சொல்லி வந்தால் சீக்கிரமாக தெளிவாக பேச முடியும். பேச்சு சரியாக வராதவர்களுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையில் இதுவும் ஒன்று. நாம் இந்த பதிவில் சில நகைச்சுவையான நா பிறழ் சொற்களை (Funny Tongue Twisters in Tamil) படித்தறிவோம் வாங்க.

Funny Tongue Twisters in Tamil:

1 காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?

2. தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தானடி ஓட்டம்

3. நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை

4. துளி துளி பனித்துளி
கிளி கிளி பசுங்கிளி
களி களி கண்டுகளி
விழி விழி கருவிழி

5. கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.

நாபிறழ் நாநெகிழ் பயிற்சி:

6. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்

7. சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.

8. சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்ததும் முறுக்கு மீசை இறங்கவில்லை

9. குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.

10. வாழைப்பழத்தில் வழுக்கி தாழை புதரில் விழுந்தால்.

Tamil Tongue Twisters Funny:

11. ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை

12. கார் சீற நீர் சீறும்
ஏர் கீற வேர் கீறும்

13. வீட்டுக்கிட்ட கோரை, வீட்டுக்கு மேல கூரை, கூரை மேல நாரை

14. மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை

15. அம்பல வெவ்வள வெவ்வள வேவிழி யார்ந்த கொவ்வைச்
செம்பள வெவ்வள வவ்வள வேயிதழ் சீர்கொள் வஞ்சிக்
கொம்பள வெவ்வள வவ்வள வேயிடை கூறெலுமிச்
சம்பள மெவ்வள வவ்வள வேதனுந் தையலுக்கே

நா பிறழ் பயிற்சி: 

16. ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து, குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்

17. சடுகுடு விளையாட புடுபுடு புல்லேட்ல குடுகுடுனு போனா, வழில திடுதிடுனு வந்த மாடுங்க, கிடுகிடுனு ரோட கிராஸ் பண்ணாம கடுகடுனு கடுப்பாக்குது.

18. படபடனு வந்த தூரல்ல தடதடனு அடிச்ச கதவ சாத்த மடமடனு ஓடிப் போனா சடசடனு பெஞ்ச மழ சட்டுனு கடகடனு காணாம போய்டுச்சு.

19. கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.

20. உளி பெருக சிலை அழகு
அலை உலவ கடல் அழகு

Funny Tongue Twisters in Tamil:

21. வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்

22. கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

23. சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு

24. பச்சை நொச்சை கொச்சை, பழி கிழி முழி, நெட்டை குட்டை முட்டை, ஆடு மாடு மூடு .

25. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது

நா பிறழ் சொற்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil