வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைகளுக்கான கடி ஜோக்ஸ் 

Updated On: October 29, 2025 1:09 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kids Jokes Tamil 

இன்றைய பதிவில் குழந்தைகளுக்கான கடி ஜோக்ஸ் என்பதை பற்றி பார்க்க போகிறோம். இதனால் அவர்களின் மனது மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பரபரப்பு நிறைந்த உலகமாக இருக்கிறது. இதனால் வேலை விட்டு வந்த பிறகு நாலு செவுத்துக்குள்ளயே தான் இருக்கிறார்கள். கரண்ட் இல்லேன்னாலும் கூட வெளியில் வர மாட்டிக்கிறார்கள். காரணம் மொபைல் தான். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி இருக்கிறது.

மேலும், சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்று கூறுகிறார்கள். பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை நாடுவோம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். குழந்தைகள் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கடி ஜோக் கேட்டு மகிழ்வார்கள். அதன் அடிப்படையில் இன்றைய பதிவில் குழந்தைகளுக்கான கடி ஜோக்ஸ் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….

குழந்தைகளின் கடி ஜோக் :

1.ஒரு சிறுமி பள்ளிக்கு ஏணியை கொண்டுவந்தால் ஏன் தெரியுமா

விடை : ஏனென்றால் அவள் உயர்நிலை பள்ளிக்குச்  செல்ல விரும்பினால்

2. கடிகாரம் 13 அடிக்கும் போது நேரம் என்ன?

விடை :புதிய கடிகாரம் வாங்க வேண்டிய நேரம் 

3. குக்கீ என் மருத்துவமனைக்கு சென்றது?

விடை :ஏனென்றால் அவர் எரிச்சலடைந்தார் 

4. கீழே விழுந்தால் காயம் படாமல் இருப்பது எது?

விடை :மழை 

5. எந்த வில்லை நாம் கட்ட முடியாது?

விடை :வானவில் 

6. பச்சை கற்களை கடலில் வீசியிருந்தால் அது என்னவாகும்?

விடை :ஈரமாகும் 

7. மரம் செடி இல்லாத கார்டு எது ?

விடை :சிம் கார்டு 

8. பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன ?

விடை :பற்கள் தான் 

9. பசுமாடு ஏன் பால் தருகிறது ?

விடை : அதனால் காபி டீ தர முடியாது

10. தம்பி தீக்குச்சியை பத்த வெட்சி ஏன் இட்லி மேல வெட்சி பாக்குற ?

விடை :நீங்கதான இட்லி பஞ்சி மாதிரி வேணும்னு சொன்னிங்க அத தீப்பிடிக்குதான்னு பார்த்தேன் 

11. கணக்கு பரீட்சையில கணக்கு போடாம ஏன்டா இப்புடி டான்ஸ் ஆடிட்டு இருக்க ?

விடை : சார் நீங்கதான சொன்னிங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டுன்னு

12. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தை எது தெரியுமா ?

விடை :பனியன் 

13. டாக்டர் கண் ஆப்ரேஷன் பன்றதுக்கு முன்னாடி சூரியனை வணங்க சொல்கிறார் ஏன் ?

விடை : கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாதுல அதா 

14. ஏன்டா மெதுவா லெட்டர் எழுதுற ?

விடை :எங்க அம்மாக்கு வேகமா படிக்க வராது அதான் 

15. அதிக எடை தூக்குற பூச்சி எது ?

விடை :மூட்டை பூச்சி 

16. பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது ?

விடை :தொப்பை 

17. எலிக்கு பின்னாடி ஏன் வால் இருக்கு ?

விடை :ஏன்னா எலி செத்தா பின்னாடி தூக்கி போட்றதுக்குதா 

18. லெட்டருக்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம் ?

விடை :லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்ததகத்த படிச்சிட்டு கிழிப்போம் 

19. ஒரு மாமி இட்லியை தலையில் வைத்து இருக்கிறாள் ஏன் தெரியுமா ?

விடை :ஏன்னா அந்த இட்லி மல்லிகை பூ போல இருந்துச்சாம்

20. குடிக்க முடியாத டீ எது ?

விடை :கரண்டி 

21. நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம் ?

விடை :நின்னுகிட்டு தூங்குன கீழ விழுந்துடுவோம் அதா 

22. கொசு நம்ம வீட்டுக்கு வரமா இருக்க என்ன பண்ணனும்?

விடை :அது கிட்ட நம்ப வீட்டு அட்ரஸ் குடுக்காம இருக்கனும்.

23. தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?

விடை :செலவாகும்

24. ரெண்டு பெரு ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் பண்ணி சப்புட்றாங்க அத சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சா ஏன் ?

விடை :ஏன்னா அது நாலு நாள் இட்லி

25. எந்த பூச்சி தொட்டால் சாக் அடிக்கும் ?

விடை :மின்மினி பூச்சி 

26. கோழி ஏன் முட்டை போடுது தெரியுமா ?

விடை :ஏன்னா அதுக்கு ஒன்னு ரெண்டு மூணு போடா தெரியாது

27. பறவைகள் எங்கியிருந்து வருகின்றன ?

விடை :முட்டையிலிருந்து 

28. அண்ணனுக்கு தம்பிக்கு என்ன வித்தியாசம்?

விடை :வயசு வித்தியாசம் 

29. முள் குத்தின ஏன் ரத்தம் வருது ?

விடை :யார் குத்தினானு பாக்க வருது 

30. ஆறும் ஆறும் சேர்ந்தால் என்ன வரும் ?

விடை :வெள்ளம் வரும் 

31. ரொம்ப காஸ்லியான கிழமை எது ?

விடை :வெள்ளிக்கிழமை 

உங்கள் கவலைகளை மறக்க சில கடி ஜோக்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

 





Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now