இந்த செம கடிஜோக்ஸை ஒரு முறை படிச்சு பாருங்க சிரிப்பை நிறுத்தவே மாட்டீங்க..!

kadi jokes in tamil with answers

Sema Kadi Jokes in Tamil With Answers

பொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே இன்பம் மற்றும் துன்பம் இரண்டும் கலந்த ஒன்று தான் வாழ்க்கையாக அமையும். இவ்வாறு இருக்கையில் இன்பம் வந்தால் அதனை மகிழ்ச்சியாக அனுபவித்து சென்று விட வேண்டும். அதுவே துன்பம் வந்தால் அதனை மறக்க மொக்க கடிஜோக்கினை ஒரு முறை படித்தால் போதும் வந்த துன்பம் ஆனது இடம் மறந்து போகிவிடும். ஆகையால் இன்று அனைவரும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கக்கூடிய செம மொக்க கடி ஜோக்சினை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கடி ஜோக்ஸ் அறுவை

  1. காலே இல்லாத Table பெயர் என்ன தெரியுமா..?

  விடை: வேற என்ன Time Table தான்.

2. யானைக்கும், பூனைக்கும் என்ன வித்தியாசம்..?

விடை: யானை மேல பூனை சவாரி பண்ணலாம், ஆனா பூனை மேல யானை சவாரி பண்ண முடியுமா.

3. ஒரு ஊருல மழை பேஞ்ச போது அந்த ஊருல உள்ள எல்லா ஆறையும் அடைச்சு வச்சாங்கலாம், ஆனா ஒரு ஆற மட்டும் அடைக்கலையாம் ஏன் சொல்லுங்க..?

விடை: ஏன்னா அந்த ஆறோட பேரு அடையார்.

4. கொசுவுக்கு தன்னம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி ஏன் தெரியுமா..?

விடை: ஏன்னா அது போற இடத்துல எல்லாம் யாரவது கை தட்டிகிட்டே இருக்காங்களா அதான்.

5. ஒருத்தர் மேடையில் பேசும் போது மீசை கருகிடுச்சான் ஏன்..?

விடை: அவரு மேடையில் பேசும்போது அனல் பறக்க பேசுனாராம்.

6. உலகத்திலேயே சகிக்க முடியாத கடி என்ன கடி தெரியுமா..?

விடை: வேற எது நெருக்கடி தான்.

7. ஒருத்தர் பசுமாட்டை கூட்டிகிட்டு போருக்கு போயிருக்காரு ஏன் தெரியுமா..?

விடை: அது வைக்க போரான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

8. உலகத்துலேயே இந்த நரி பெரிய நரி தெரியுமா..?

விடை: Dictionary.

9. பேச முடியாத வாய் எது..?

விடை: செவ்வாய்.

10. ஒருத்தன் Car Tank-ஐ ஓபன் பண்ணி சிரித்தாராம் ஏன்..?

விடை: மனசு விட்டு சிரிச்சா ஆயுள் (OIL) கூடும்னு யாரோ சொன்னாங்களான்.

11. ஏன் இட்லியில் இருந்து ஆவி வருது தெரியுமா..?

விடை: ஏன்னா அது செத்து போயிடுச்சாம்.

12. கோழி ஏன் முட்டை போடுது..?

விடை: ஏன்னா அதுக்கு 1,2,3 தெரியதாம்.

13. Republic Day-க்கும், Independence Day-க்கும் என்ன வித்தியாசம்..?

விடை: Republic Day அன்னைக்கு Independent-ஆ சுத்தலாம். ஆனா Independence Day அன்னைக்கு Republic-ஆ சுத்த முடியாது.

14. வருடத்திற்கு ஒரு முறை வரும் Guest யாரு..?

விடை: வேற யாரு August தான். 

15. ஒருத்தர் பேங்க்ல வாங்குன கடனை அடைக்க வெறும் சில்லறையா கொண்டு போனாராம் ஏன் தெரியுமா..?

விடை: பேங்க் மேனஜர் சொன்னாராம் வாங்குன கடனை நாணயம் அடைக்கணும்னு அதான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்