வயிறு குலுங்க குலுங்க சிரிக்கணுமா..? அப்போ இதை படியுங்கள்..!

Kadi Jokes Questions and Answers in Tamil

Kadi Jokes Questions and Answers in Tamil

பொதுவாக நமது மனதில் ஏதாவது மனக்குழப்பத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மில் சிலர் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பத்தை மறந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம் அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரியுங்கள்..!

Kadi Jokes Questions and Answers in Tamil

  1. முட்டை போடாத பறவை எது.?

விடை : ஆண்பறவை

2. எந்த காட்டுலையும் கிடைக்காத பூச்சி அது, என்ன பூச்சி.?

விடை : கண்ணாபூச்சி 

3. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தானாம் ஏன்.?

விடை : ஏன்னா, அது தடுப்பூசியாம்..!

4. கொடையை ஏன் தூக்கிட்டு போராங்கனு தெரியுமா.?

விடை : ஏன்னா கொடையால நடக்க முடியாதுல..!

5. மழை வரதுக்கு முன்னாடி வானம் எப்படி இருக்கும்.?

விடை : மழை வராம இருக்கும்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

படிக்க படிக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மொக்க கடி ஜோக்ஸ்

6. ஒருத்தன் Cell-ய வாங்கி பாத்துகிட்டே இருந்தானாம் ஏன்.?

விடை : ஏன்னா அது Parcel-லாம் அதான்

7. ஒருத்தன் திடீர்னு பசிக்குதுனு Mobile-ல கடிச்சி சாப்பிட் டானாம் ஏன்.?

விடை : ஏன்னா அது Appel Mobile-லாம்

8. ஒரு பழத்த சாப்பிடவும் முடியாது ஜூஸ் போடவும் முடியாது அது என்ன பழம்.?

விடை : அதாங்க அழுகி போன பழம் 

9. ஒருத்தன் அவங்க வீடு சுவர்ல ஆணி அடிச்சானாம் ஆனா ஆணி சுவர் உள்ள போகவே இல்லையாம், ஏன்.?

விடை : ஏன்னா அது பட்டாணியாம்

10. கார் போக முடியாத Root எது.?

விடை : Beetroot 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்