இதை மட்டும் படித்துப்பாருங்கள் நீங்கள் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்..!

Kadi Jokes With Answers in Tamil

Kadi Jokes With Answers in Tamil

பொதுவாக நமது மனதில் ஏதாவது மனக்கவலையில் அல்லது துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மில் சிலர் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.

அப்படி உங்களின் மனதில் உள்ள கவலை மற்றும் துன்பத்தை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரியுங்கள்..!

Kadi Jokes With Answers in Tamil

  1. எறும்புக்கும் கரும்புக்கும் என்ன வித்தியாசம்..?

விடை : நாம கரும்பை கடிக்குறோம். எறும்பு நம்மள கடிக்குது.

2. ஒருத்தர் மோதிரத்தை தன்னோட கால் விரல்ல போட்டுருந்தாராம் ஏன்..?

விடை : ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.

3. கொக்கு எப்போ ஒத்த கால்ல நிக்கும்..?

விடை : அது ஒத்த கால எப்போ தூக்குதோ அப்ப தான்.

4. நாம் ஏன் தண்ணி தெளிச்சு கோலம் போடுறோம் தெரியுமா..?

விடை : கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்ல.  

5. ஒரு பையன் தன்னோட அப்பா பெயரை எழுதி கொண்டுபோய் ஃப்ரிட்ஜ் குள்ள வைச்சானாம். ஏன்..?

விடை : ஏன்னா அவங்க அப்பா பெயர் கெட்டுற கூடாதாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

வயிறு குலுங்க குலுங்க சிரிக்கணுமா..? அப்போ இதை படியுங்கள்..!

6. எலுமிச்சை பழம் ஆணா ? பெண்ணா?

விடை : ஆணு தான்! ஏன்னா அத புழுஞ்சா சார்(Sir) வருதுல!  

7. எல்ல Stage-லயும் Dance ஆட முடியும்! ஆனா Dance ஆட முடியாத Stage என்ன Stage..?

விடை : வேற என்ன “Coma” Stage தான்.

8. ஒரு அரக்கன் அரக்கிய வச்சி கோவில் பூட்ட திறந்தான்! ஆனா திறக்க முடியல ஏன்..?

விடை : அரக்கி(Key) வச்சி பூட்டு திறக்க முடியாதுல! முழுக் ” கீயூம்” வேணும்ல.

9. Circle அறிவாளியா ? இல்ல Square அறிவாளியா..?

விடை : Square தான் ஏன்னா அதுக்கு தா நாலு மூளை இருக்குள்ள.

10. ஒருத்தன் Maths Exam எழுதும் பொழுது Dance ஆடிட்டே எழுதுனானாம் ஏன்..?

விடை : ஏன்னா Maths-ல தான் Steps-க்கு லாம் Mark இருக்கே.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க..!

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்