இதை மட்டும் படிச்சிங்கனா, நீங்களே நினைத்தாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது..!

kadi jokes

Kadi Jokes

நகைச்சுவை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவோம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். உங்களின் கவலைகளை மறக்க இந்த பதிவின் மூலம் சில கடி ஜோக்ஸை பற்றி தெரிந்து கொள்வோம். சரி வாங்க நண்பர்களே சிரித்து கொண்டே இந்த முழு பதிவையும் படிப்போம்.

கடி ஜோக்ஸ் கேள்வி பதில்:

கடி ஜோக்ஸ்

  1. டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது..?

விடை: வாசிங்டன்

2. குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா..?

விடை : நாயால் ஒரே சமையத்தில் இரண்டு வேலையை எப்படி செய்ய முடியும்.

3.  ஒருத்தன் சர்க்கரையை வாங்கிட்டு வந்தானாம். 100 கிராம் சர்க்கரை குறைஞ்சு இருந்துச்சாம் ஏன்.?

விடை: ஏன்னா நடந்து வந்தா சுகர் குறையும்னு டாக்டர் சொன்னாராம்.

4. சாப்பிட முடியாத கனி எது..?

விடை: பால்கனி

5. ரோட்டுல போற நிறைய பேர் ஒருத்தர் கிட்ட மட்டும் அடிக்கடி TIME கேக்குறாங்க ஏன்.?

விடை: ஏன்னா அவரு தான் வாட்ச்மேனா.

6. உட்கார முடியாத தரை எது..?

விடை: புளியோதரை

7. எல்லா Stage -லையும் டான்ஸ் அட முடியும், ஆனா ஒரு Stage -ல மட்டும் டான்ஸ் ஆட முடியாது. அது என்ன ஸ்டேஜ்..?

விடை: வேற என்ன கோமா ஸ்டேஜ் தான்.

8. ஒருத்தன் Maths Exam எழுதும் போது டான்ஸ் ஆடிகிட்டே எழுதுனா ஏன்..?

விடை: ஏன்னா Maths -ல தான் Step -க்கு மார்க் இருக்கே.

9. ஒரு பொண்ணு எப்போதுமே ரூம் கதவை Close பண்ணிட்டு தான் டானிக் குடிப்பாளாம் ஏன்..?

விடை: ஏன்னா டாக்டர் தான் அரை மூடி குடிக்க சொன்னாராம்.

10. எந்த எழுத்த எழுத முடியாது.?

விடை: தலையெழுத்து

11. ஒரு டாக்டர் Patient கிட்ட உங்க Kidney Fail ஆகிடிச்சினு சொன்னாராம்.. அதுக்கு அந்த Patient என்ன சொல்லிருப்பாரு?

விடை:  நான் என்னோட Kidney-ய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது Fail ஆகும்.

12. எந்த Watch கரெக்டா Time காட்டும்?

விடை: எந்த Watch –ம் காட்டாது நாம தா பாத்துக்கணும்.

13. ஒருத்தன் Exam-Hall போயிட்டு திரும்பி வந்துட்டான்னா ஏன்?

விடை: ஏன்னா அது Return Exam –

14. மரமே இல்லாத காடு அது என்ன காடு?

விடை: சிம்கார்ட்.

15. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தானா ஏன்?

விடை: ஏன்னா அது தடுப்பூசியாம்.

இதையும் படியுங்கள் Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

இதுபோன்று ஜோக்ஸை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Jokes