Mokka Jokes Questions with Answers in Tamil
பொதுவாக நமது மனதில் ஏதாவது ஒரு மனக்குழப்பம் மற்றும் வருத்தம் உள்ளது என்றால் நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள மனக்குழப்பம் மற்றும் வருத்தம் ஆகியவற்றை மறந்து நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் சில மொக்க கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து வயிறு குலுங்க குலுங்க சிரியுங்கள்..!
Mokka Jokes Questions and Answers in Tamil
- ஒருத்தன் காலைல எழுந்து Shoe போட்டுக்கிட்டு Ground-ல செம்ம Speed ஓடுனானாம். தீடீர்னு பார்த்தா அவன் கால்ல இருந்து ரத்தம் வருது ஏன்..?
விடை : ஏன்னா அவன் போட்டுட்டு இருந்தது Cut Shoe ஆம் அதான் கால Cut பண்ணிடுச்சு.
2. பல்லி மிட்டாய்க்கும், குச்சி மிட்டாய்க்கும் என்ன வித்தியாசம்..?
விடை : குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். ஆனால் பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுல.
3. ஒருத்தர் ஹோட்டலுக்கு போய் காபி Order பண்ணாராம்… ஆனா சர்வர் வெறும் Cup-யை கொண்டு வந்து தந்தாராம்..ஏன்..?
விடை : ஏன்னா அவர்தான் சொன்னாராம் Cup Clean-ன இருக்கனும்னு.
4. Non Veg காய் எது..?
விடை : முட்டைகோஸ்.
5. ஒரு Doctor கிட்ட கார், பங்களா, சொத்து எல்லாம் இருக்காம். ஆனா அவரு Hospital போகும்போது மட்டும் நடந்தே போவாராம் ஏன்..?
விடை : ஏன்னா அவரு கால் நடை டாக்டராம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வயிறு குலுங்க குலுங்க சிரிக்கணுமா அப்போ இதை படியுங்கள்
6. கார் ஓட்டத்தெரிஞ்ச விலங்கு எது..?
விடை : கங்’காரு’.
7. Make Up போடுற பறவை எது..?
விடை : ‘மை’ னா.
8. முட்டைக்கு நடுவில என்ன இருக்கும்..?
விடை : வேற என்ன “ட்” தான் இருக்கும்.
9. தூங்குறதுக்கு முன்னாடி ஏன் Good Night சொல்றோம்..?
விடை : ஏன்னா தூங்கிட்டால் சொல்ல முடியாதுல அதான்.
10. எறும்புக்கும் யானைக்கும் என்ன வித்தியாசம்..?
விடை : ஒரு எறும்பால 100 யானையைக் கடிக்க முடியும். ஆனா ஒரு யானையால 100 எறும்பைக் கடிக்க முடியுமா..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதை மட்டும் படித்துப்பாருங்கள் நீங்கள் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்
11. பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
விடை : தொப்பை
12. கோழி ஏன் முட்டை போடுது.?
விடை : ஏன்னா.. அதுக்கு 1,2,3.. தெரியாது.
13. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
விடை : அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
14. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
விடை : ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.
15. Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.
வேற எங்க!
விடை : Mapல தான்
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |