நகைச்சுவை கவிதைகள்

Advertisement

நகைச்சுவை கவிதைகள் | சிரிக்க வைக்கும் கவிதை | Nagaisuvai kavithaigal in tamil download

பொதுவாக நகைச்சுவை என்றாலே அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒன்று. மனதில் உள்ள கஷ்டம், குழப்பம் யாவும் நீங்க நகைச்சுவை பார்த்து மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வோம். மனதில் கஷ்டத்துடன் இருக்கும் போது வெளியில் நண்பர்களுடன் சேர்ந்து நகைச்சுவையாக பேசி சிரிப்பது இன்னும் மனதிற்கு ஆறுதல் நிலை கிடைக்கும். நகைச்சுவை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே விட கவிதையும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இவை இரண்டு சேர்ந்தால் எப்படி இருக்கும் இருக்கும், ஆமாங்க இந்த பதிவில் நகைச்சுவைகளை கவிதைகளாக அறிந்து கொள்வோம் வாங்க..

நகைச்சுவை காதல் கவிதைகள்:

குளத்துக்குள் மீன் இருப்பதும்
உன்னுள் நான் இருப்பதும் ஒன்று தான்
நீர் போனால் மீன் சாகும்
நீ போனால் நான்சாகுவேன்

கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
கோழியினால்தான் முட்டை வந்தது
எப்படி?
ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆடர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது.
இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

சிரிப்பு பற்றிய கவிதை:

சிரிப்புகள் உலகில் பலவிதம்

பிரித்துப் பார்த்தால் பரவசம்!

தனியே சிரித்தால் பைத்தியம்

கூட்டத்தில் சிரித்தால் ஆனந்தம்!

இதழ்கள் பிரிந்தால் சிரிப்பு

இதயங்கள் பிரிந்தால் சோகம்!

காதலர்கள் சிரிப்பர் கண்களால்

ஓவியத்தில் சிரிப்பர் மவுனமாக.!

அன்னை சிரிப்பில் பாசம்

அப்பா சிரிப்பில் ஊக்கம்!

மழலை சிரிப்பில் மகிழ்ச்சி

சிறுவன் சிரிப்பில் குறும்பு!

தமக்கை சிரிப்பில் நம்பிக்கை

தங்கை சிரிப்பில் எதிர்பார்ப்பு!

நண்பன் சிரிப்பில் குளுமை

விரோதி சிரிப்பில் எரிச்சல்!

சோம்பேறி சிரிப்பில் வெறுப்பு

உழைப்பாளி சிரிப்பில் களிப்பு!

உள்ளம் மகிழ சிரியுங்கள்

உலகம் சுழலும் உன் கையில்!

நகைச்சுவை கவிதைகள்:

 nagaisuvai kavithaigal

திருமண விழாக்களில் மணமகனை காரிலோ, குதிரையிலோ வைத்து அழைத்துச் செல்கிறார்களே அது ஏன் தெரியுமா..?
மண மகன் தப்பித்துச் செல்லத் தரும் இறுதி வாய்ப்பாம் அது!

ஒரு எறும்பு ஒரு யானையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாம்…
ஒரே நாளில் யானை இறந்துவிட்டதாம்..
எறும்பு அழுது புலம்பியதாம்..
“ஒரு நாள் காதலித்துக்காக என் ஆயுள் முழுவதும் குழி தோண்டவைத்துவிட்டாயே!“ என்று.

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
உன்னையும் என்னையும் பிரிப்பது
உன் அம்மாவின் ஆசை

மனைவி: என்னங்க செத்துட்டா கணவன் மனைவி தனியா தான்  இருக்கணும்ல
கணவன்: அதனால தான் அது சொர்க்கம்

நகைச்சுவை கவிதைகள் தமிழ்

சுடுகாடு என்று சீப்பா நினைக்காதீங்க
அவ அவ அங்க போறதுக்காக உயிரையே கொடுக்கிறான்

அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு

இனிப்பது வெறுக்கும் திகட்ட திகட்ட
சிரிப்பது பெருகும் நினைக்க நினைக்க – எனவே

அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு

பட்டுன்னு சிரிப்பு மெட்டது மனசிலே
சொட்டுன்னு மழைத்துளி ஜில்லுன்னு நிமிடம் – எனவே

அறுசுவை கிடக்கட்டும் அத விடு
நகைச்சுவை இருக்குது அத எடு

நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்…
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா.?

புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement