இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்க உங்க மனதில் உள்ள அனைத்து கவலையையும் மறந்து மனம்விட்டு சிரிப்பீங்க..!

Sema Kadi Jokes in Tamil

Sema Kadi Jokes in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் மற்றும் கவலைகள் இருக்கும். அதனால் அதனை மறப்பதற்காக பலரும் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வாய்  விட்டு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!

Kadi Jokes Questions and Answers in Tamil

  1. முதலைக்கும் ஒட்டகத்துக்கும் Running Race வைத்தால் யார் First வருவாங்க.?

விடை: முதலை தான் முதலில் வரும்.

2. ஒருத்தர் எப்போதும் காரை Reverse-லேயே ஓட்டிட்டு போவாராம் ஏன்.?

விடை: அப்போதான் காரை விற்கும் போது கி.மி குறைவா காட்டுமாம்.

3. ஒருத்தர் Night தூங்கும் போதும் கண்ணாடியை போட்டுக்கிட்டே தூங்குவாராம் ஏன்.?

விடை: அப்போ தான் கனவு எல்லாம் தெளிவாக தெரியுமாம்.

4. வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட முடியாத பாக்கு எது.?

விடை: மைசூர் பாக்கு.

5. கிணத்துக்குள்ள கல்லை போட்டா ஏன் முழுகுது.?

விடை: ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாதுல.

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

6. ஒரு பையன் கடைக்கு போய் ஊசி வாங்குனானாம், ஆனா அது வெடிச்சிடுச்சு ஏன்.?

விடை: ஏன்னா அவன் வாங்கியது குண்டு ஊசியாம். 

7. Coffee-யை விட Tea தான் நல்லது ஏன் தெரியும்.?

விடை: Coffee-ல இரண்டு ee (ஈ) இருக்கு ஆனா Tea-ல ஒரே ஒரு e (ஈ) தான் இருக்கு. 

8. பொங்கலுகும் தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்.?

விடை: தீபாவளி அன்னைக்கு பொங்கல் சாப்பிட முடியும், ஆனா பொங்கல் அன்னைக்கு தீபாவளியை சாப்பிட முடியாதுல. 

9. தங்க வீடு தேடிகிட்டு இருந்தாரு ஒருத்தர் ஆனா அது அவருக்கு கிடைக்கவே இல்லையாம் ஏன்.?

விடை: ஏன்னா வீடெல்லாம் தங்கத்துல செய்ய மாட்டாங்க. 

10. அயன் மேனோட எதிரி யாரு தெரியுமா.?

விடை: வேற யாரு துரு தான். 

உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து சிரிக்க வேண்டுமா அப்போ இதை படியுங்கள் உங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

11. ஒரு எறும்பை கட் பண்ணா என்ன ஆகும்.?

விடை: கட்டெறும்பாகும். 

12. கொசுவுக்கு தன்னம்பிக்கை அதிகம் ஏன்.?

விடை: ஏன்னா அது எங்க போனாலும் யாராவது கைதட்டிகிட்டே இருக்காங்களே அதன். 

13. உலகத்திலேயே பணக்கார மீன் எது.?

விடை: தங்க மீன் தான். 

14. அப்பா கேக்குறாரு ஏன்டா கணக்கு பாடத்துல Zero எடுத்துருக்கனு.?

விடை: பையன் சொல்லுறான் எங்க டீச்சர் தான் கணக்குல Zero-க்கு மதிப்பு அதினமுனு அதன் Zero வாங்கி இருக்கேன். 

15. மகாராஜாவின் மனைவி காற்றடிச்சா பறந்து விடுவார்களாம் எப்படி.?

விடை: ஏன்னா அவங்க தான் “பட்டத்து” ராணி ஆச்சே. 

இதனை ஒரு முறை படித்தீர்கள் என்றால் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்