கடி ஜோக்ஸ்..! | Short Funny Jokes in Tamil..!
பொதுவாக ஜோக்ஸ் என்றாலே அனைவரும் விரும்பி பார்ப்போம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் துன்பங்கள் அனைத்தும் மறைந்து நீங்கள் வாய்விட்டு சிரிக்க இப்பதிவில் சில கடி ஜோக்கை நாங்கள் கொடுத்துள்ளோம். வாருங்கள் கவலை மறந்து சிரிக்க இப்பதிவில் உள்ள கடி ஜோக்கை படிப்போம்.
கடி ஜோக்ஸ் கேள்வி பதில்:
- எலுமிச்சை பழம் ஆணா..? பெண்ணா..?
விடை: ஆண், ஏன்னா அதை பிழிந்தால் சாறு வருதுல.
2. எல்லா ஸ்டேஜ்லையும் டான்ஸ் ஆட முடியும்..! ஆனா ஒரு ஸ்டேஜ்ல மட்டும் டான்ஸ் ஆட முடியாது அது என்ன ஸ்டேஜ்னு தெரியுமா..?
விடை: ஹோமா ஸ்டேஜ்
3. ஒரு அரக்கன் ஒரு அரக்கீய வைத்து கோயில் பூட்டை தொறக்க போனானான் ஆனா தொறக்க முடியலையாம் ஏன்..?
விடை: அரைக்கியை வைத்து எப்படி பூட்டை தொறக்க முடியும், முழு கீயை வைத்து தான் தொறக்க முடியும்.
இதையும் படித்து சிரியுங்க ⇒ மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க..!
4. Circle அறிவாளியா.? எல்லா Square அறிவாளியா.?
விடை: Square தான் அறிவாளி, ஏன்னா அதுக்கு தான் நான்கு மூளை உள்ளது.
5. ஒருத்தன் ஆடு, கோழி வளர்த்தானாம். அவன் ஒரு நாள் சோறு வைக்கும் போது எல்லாம் ஓடி போச்சாம் ஏன்..?
விடை: ஏன்னா அவன் வச்சது புலி சோறு.
6. Made in China -விற்கு Opposite என்ன..?
விடை: பள்ளம் in China. மேடுக்கு Opposite-க்கு பள்ளம் தான.
7. ரொம்ப குளிர்ச்சியான இங்கிலிஷ் லெட்டர் எது..?
விடை: B ஏன்னா AC-க்கு நடுவில் இருக்குல்ல.
8. காட்டுல TAX கட்டுற விலங்கு எது..?
விடை: வரிக்குதிரை.
9. முட்டைக்கு நடுவுல என்ன இருக்கும்..?
விடை: ட் தாங்க இருக்கும்.
10. கார் போக முடியாத ரூட் எதுன்னு சொல்லுங்க..?
விடை: அதாங்க பீட்ரூட்.
11. காத்தாடி ஏன் சுத்துது தெரியுமா..?
விடை: ஏன்னா அதுக்கு அட்ரஸ் தெரியாதாம்.
12. பாட்டிக்கு ஒரு கால் ஒடிஞ்சா என்ன ஆகும்..?
விடை: பட்டி ஆகியுடும்.
13. ஒரு எறும்ப கட் பண்ணா என்ன ஆகும்..?
விடை: கட்டெறும்பா ஆகிடும்.
14. கொசுவுக்கு தன்னம்பிக்கை அதிகம் ஏன்..?
விடை: ஏன்னா அது எங்கு போனாலும் பல பேர் கை தட்டுறாங்கல்ல.
15. ஒருத்தர் மோதிரத்தை அவரோட கால் விரலில் போட்டு இருந்தாராம் ஏன்..?
விடை: ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.
இதுபோன்று ஜோக்ஸை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Jokes |
இதுபோன்று ஜோக்ஸை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>