அடுக்குத்தொடர் சொற்கள் 100
நம்முடைய பள்ளி வகுப்பிலும் சரி கல்லூரியிலும் சரி இலக்கண பாடம் அவசியமானது. எப்படி ஆங்கிலத்தை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் Grammar தேவைப்படுகிறதோ அது போன்று தமிழை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் இலக்கணம் தேவைப்படுகிறது.
தமிழ் இலக்கமானது ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். இந்த பதிவில் அடுக்குத்தொடர் என்றால் என்ன, அவற்றின் சொற்கள் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..
அடுக்குத்தொடர் என்றால் என்ன.?
வாக்கியங்களில் பொருளைத் தெளிவுப்படுத்தவும் அழகுபடுத்தவும் உதவும் தொடர்களில் அடுக்குத்தொடரும் ஒன்றாகும். ஒரு சொல் அடுக்கி வந்து தனி தனி சொல்லாக பிரிந்தாலும் பொருள் உணர்த்துமாயின் அது அடுக்குத்தொடர் எனப்படும்.
இவை மூன்று வகைப்படும், அவை
⇒ அசைநிலை அடுக்குத்தொடர்
⇒ பொருள் நிலை அடுக்குத்தொடர்
⇒ இசைநிறை அடுக்குத்தொடர்
அசைநிலை அடுக்குத்தொடர்:
ஒரு பெயர்ச் சொல்லையோ, வினைசொல்லையோ சார்ந்து வருவது அசைநிலை அடுக்குத்தொடராகும். இரு முறை ஒரு சொல் தொடர்ந்து வரும் அடுக்குத்தொடரானது ‘அசைநிலை அடுக்குத்தொடர் ‘ எனப்படும் .
எடுத்துக்காட்டு,
⇒ மணமக்கள் வாழிய வாழிய
பொருள் நிலை அடுக்குத்தொடர்:
உணர்ச்சிகளை குறிக்கும் விதத்தில் அமையும் அடுக்குத்தொடர் பொருள்நிலை அடுக்குத்தொடராகும்.
எடுத்துக்காட்டு,
⇒ அச்சம் – தீத்தீ , பாம்பு பாம்பு, ஓடுங்கள் ! ஓடுங்கள் ! ”
⇒ வெகுளி – விடு ,விடு,விடு
⇒ உவகை (மகிழ்ச்சி) – வாருங்கள் ! வாருங்கள் ! ,
⇒ அவலம் – ஐயகோ ! ஐயகோ ! , வீழ்ந்தேன் வீழ்ந்தேன் .
⇒ விரைவு- போ போ
இசைநிறை அடுக்குத்தொடர்:
ஓசைக்காக நிரப்புவதற்கென்று, ஒரே சொல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவது ‘இசைநிறை அடுக்குத்தொடர் என்றழைக்கிறோம்.
எடுத்துக்காட்டு,
⇒ வாழ்க நிரந்தரம் ,
⇒ வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே ! – பாரதியார்
தினமும் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் ஹிந்தியில்..!
அடுக்குத்தொடர் சொற்கள் 100:
அடுக்குத்தொடர் சொற்கள் | ||
அடுத்து அடுத்து | அடுக்கி அடுக்கி | அழுகை அழுகையாக |
அணு அணு | அடி அடி | அழுது அழுது |
அளந்து அளந்து | அந்தோ அந்தோ | அன்றே அன்றே |
ஆங்காங்கு | ஆண்டு ஆண்டு | ஆடி ஆடி |
இறங்கி இறங்கி | இசைந்து இசைந்து | உழைத்து உழைத்து |
உயர உயர | உண்டு உண்டு | உதை உதை |
ஊர்ந்து ஊர்ந்து | ஊர் ஊர் | ஊற்றி ஊற்றி |
என்ன என்ன | எடு எடு | ஏழு ஏழு |
ஏறி ஏறி | ஐயோ ஐயோ | ஒளித்து ஒளித்து |
ஓடி ஓடி | ஓய்ந்து ஓய்ந்து | கரிய கரிய |
அடுக்குத்தொடர் சொற்கள் 100 | ||
கட்டு கட்டாக | கட்டி கட்டி | கற்றை கற்றை |
கதறி கதறி | கொத்து கொத்தாக | காத்து காத்து |
காய்ந்து காய்ந்து | கால்வலி கால்வலி | கிராமம் கிராமம் |
குலை குலையாக | குவியல் குவியல் | குறைந்து குறைந்து |
குளித்து குளித்து | குலுங்கி குலுங்கி | குனிந்து குனிந்து |
குழறி குழறி | கூடிக்கூடி | கூட கூடையாய் |
கூட்டம் கூட்டம் | கெட்டேன் கெட்டேன் | கொட்டிக்கொட்டி |
கொதித்து கொதித்து | கொத்துக்கொத்தாக | கோதி கோதி |
சிரித்து சிரித்து | சிரிப்பு சிரிப்பாக | சிவக்க சிவக்க |
சிறிய சிறிய | சிவந்த சிவந்த | சீப்பு சீப்பாக |
Aduku Thodar Words in Tamil | |||
நேர் நேர் | நெக்கி நெக்கி | நெடுத்து நெடுத்து | நீண்ட நீண்ட |
நிரை நிரை | நித்தம் நித்தம் | நிரை நிரை | வீதி வீதியாக |
நடுங்கி நடுங்கி | விடிய விடிய | வாழையடி வாழையாக | விருந்தி விருந்தி |
வரிசை வரிசையாக | வண்ண வண்ண | வருக வருக | வழி வழி |
மேலே மேலே | மென்று மென்று | மெல்ல மெல்ல | முத்து முத்தாக |
புதிர் புதிராக | புதிது புதிதாக | பதைத்து பதைத்து | பிடி பிடி |
பார்த்து பார்த்து | பாதை பாதை | பாம்பு பாம்பு | பாடிப்பாடி |
பக்கம் பக்கமாக | நடுங்கி நடுங்கி | தோட்டம் தோட்டம் | தேடித்தேடி |
தெளிந்து தெளிந்து | தேம்பி தேம்பி | சுற்றி சுற்றி | சுளை சுளை |
தனித்தனி | சொல்லி சொல்லி | சுவைத்து சுவைத்து | சுடச்சுட |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |