எண்கள் வகைகள் | Types of Mathematical Numbers in Tamil
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை படிக்கும் பாடத்தில் கடினம் எது என்று கேட்டால் அவர்களின் பதிலாக கணிதம் தான் இருக்கும். கணிதம் என்று சொன்னால் எல்லாருக்கும் பயம் தான் வரும். அதனை அறிந்து படிக்க ஆரம்பித்தால் கணிதத்தை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அது நம்மை அதிகம் யோசிக்க வைக்கவும் அதிகம் ஞாபக சக்தியையும் தருகிறது. அந்த வகையில் சிறுவர்கள் முதலில் கணித பாடத்தில் கற்றுக்கொள்வது எண்கள் தான். எண்கள் தெரிந்தால் போதுமா அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. வாங்க இந்த பதிவில் கணித எண்களின் வகைகளை தெரிந்துகொள்வோம்.
எண்கள் வகைகள்:
- மெய்யெண்கள்
- விகிதமுறு எண்கள்
- விகிதமுறா எண்கள்
- நேரெண்கள்
- மறையெண்கள்
- சிக்கலெண்கள்.
மெய்யெண்கள் என்றால் என்ன:
- மெய்யெண்கள் இரண்டு வகைப்படும்.
1. விகிதமுறு எண்கள்
2. விகிதமுறா எண்கள்
- மேலும் இவைகளை நேரெண்கள், மறையெண்கள் என குறிப்பிடுவார்கள்.
விகிதமுறு எண்கள்:
- கணிதத்தில் இரண்டு முழு எண்களின் விகிதமாக, அல்லது பின்னங்களாக எழுதப்பட இயலாத அனைத்து மெய்யெண்களும் விகிதமுறா எண்கள் எனப்படும். இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்களின் விகிதம் ஒரு விகிதமுறா எண் ஆகும் போது, கோட்டுத்துண்டுகளானது விகிதமுறு எண்கள் பொதுவான அளவினை கொண்டிருக்காது.
- விகிதமுறு எண்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
1. நிறையெண்கள்
2. மீளும் தசமங்கள்
3. முடிவுள் தசமங்கள் ஆகும்.
விகிதமுறா எண்கள்:
- கணிதத்தில் இரண்டு முழு எண்களின் விகிதமாக, அல்லது பின்னங்களாக எழுதப்பட இயலாத அனைத்து மெய்யெண்களும் விகிதமுறா எண்கள் எனப்படும்.
நேரெண்கள்:
- எண்கள் ஒன்றில் பூஜ்ஜியத்துக்கு வலது புறத்தில் உள்ள எண்களை நேரெண்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
மறை எண் என்றால் என்ன:
- மறை எண்கள் என்பது எண்களில் பூஜ்ஜியத்துக்கு இடப்புறத்தில் உள்ள எண் ஆகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |