தமிழின் இனிமை பாடல் விளக்கம் | Tamilin Inimai Padal Porul in Tamil
உலகில் உள்ள மொழிகளுக்கெல்லம் தொன்மை வாய்ந்தது நம்முடைய தமிழ் மொழி. மொழி ஒரு நாட்டின் அடையாளமாகவும், அந்த நாட்டின் கருவியாகவும் செயல்படுகிறது. தமிழின் பெருமையையும், சிறப்பையும் எடுத்துரைத்த கவிஞர்கள் பலர் இந்த நாட்டில் உள்ளனர். அதில் பாரதிதாசன் தமிழ் பெருமை மட்டுமல்ல இனிமையும் கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். நாம் இந்த பதிவில் பாரதிதாசனின் தமிழின் இனிமை பற்றி படித்தறிவோம் வாங்க.
தமிழின் இனிமை | Tamilin Inimai
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
பொழிலிடை வண்டின் ஒலியும் – ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் – வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் – பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் – நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் – தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!
நீலச் சுடர்மணி வானம் – ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் – ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் – நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் – தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை – கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு – கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! – உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
-பாரதிதாசன்
தமிழின் இனிமை பாடல் விளக்கம்:
பாரதிதாசன் தமிழின் இனிமையை பற்றி கூறும்போது நன்கு பழுத்த பலாவின் சுவை போன்றும், நன்கு முற்றிய செங்கரும்பில் உள்ள சாறு போலவும், தேனீக்கள் இயற்கையான மரங்களில் இருந்து சேமித்து வைத்திருக்கும் தேனை போல உள்ளது என்று தமிழை சற்று மிகைப்படுத்தி காட்டுகிறார்.
நம் வீட்டில் செய்யும் பாகு இனிப்பாக தான் இருக்கும், பாகில் ஊறவைத்த பலகாரத்தின் சுவையை போன்றும், பசுவில் இருந்து பெறப்பட்ட தூய்மையான பாலும், புதிதாக பெறப்பட்ட குளிர்ந்த இளநீரும் இனிமை தரக்கூடியவை என்றாலும், இதை விட தமிழின் இனிமை மேலானது என்று கூறுகின்றனர்.
இயற்கையில் அமைந்துள்ள பொருட்களை பார்த்தவுடன், நுகர்ந்தவுடன், மனதில் நினைத்தவுடன் நமக்கு இன்பம் வந்துவிடும், அதுபோல தமிழை பற்றி நினைத்தவுடன் இன்ப உணர்வு மனதில் தோன்றி விடும்.
அமுதத்தை உண்ணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, தமிழை படிக்கும்போது கிடைக்கும் என்று கூறுகிறார் பாரதிதாசன். எல்லா மொழியை விடவும் இனிமையான மொழியான தமிழ் மொழியை பிற மொழிகளுடன் கலப்படம் இல்லாமல் பயன்படுத்துவது நல்லது.
பகா எண்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |