பசி பற்றிய பழமொழிகள்..! | Pasi Patriya Palamoligal in Tamil

Advertisement

பசி பற்றிய பழமொழிகள்

நமது முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை அவர்கள் பலவகையில் நிரூபித்து இருக்கிறார்கள். அதாவது அவர்கள் எழுப்பிய கோவில், கோட்டை போன்றவற்றால் உள்ள சித்திரம் மற்றும் சிலைகள் போன்றவற்றை கண்டாலே அவர்களின் அறிவுத்திறனை நாம் அறிந்து கொள்ள முடியும். அதேபோல் தான் அவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அல்லது வாழ்க்கை தத்துவத்தை ஒரே ஒரு வரியில் கூறி முடித்துவிடுவார்கள்.

அது தான் பழமொழிகள் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகின்றது. இந்த பழமொழிகள் அனைத்தும் ஒரே ஒரு வரியில் தான் இருக்கும். ஆனால் அதன் பொருள் மிக மிக விரிவானதாக இருக்கும். அப்படி நமது முன்னோர்களால் பலவகையான பழமொழிகள் கூறப்பட்டுள்ளது. அதில் இன்று பசி பற்றிய பழமொழிகளை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன பழமொழிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கல்வி பற்றிய பழமொழிகள்

Pasi Patriya Palamoligal in Tamil:

  • பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?
  • பசி வந்திடில் பத்தும் பறக்கும்
  • ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாக்கும்
  • காஞ்ச மாடு கம்புல விழுந்தது மாதிரி முழுங்குகின்றான்
  • பசி ருசி அறியாது
  • யானைப் பசிக்கு சோளப் பொறியா?
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
  • கையக் கடிச்சா கறி நெல்லக் கொறிச்சா சோறு
  • பசித்துப் புசி
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம் சோறு கண்ட இடம் சொர்க்கலோகம்
  • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு
  • காங்காதவன் கஞ்சியைக் கண்டானாம் அதை ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடிச்சானாம்
  • கண்டதைத் தின்றவன் குண்டனாவான்
  • தானாத் தின்னு வீணாப் போகாதே
  • பங்கித் தின்னா பசியாறும்
  • குண்டி வத்தினாக் குதிரையும் புல்லுத் திங்குமாம்
  • பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்குத்தான்
  • பசித்தவனுக்கு பனம்பழமும் அமிர்தம்.

உணவு பற்றிய பழமொழிகள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement