வன்னம் வண்ணம் வேறுபாடு | வன்னம் வண்ணம் பொருள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வண்ணம் மற்றும் வன்னம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி கொடுத்துள்ளோம். நம்மில் பலருக்கும் வன்னம், வண்ணம் இந்த இரண்டு வார்த்தைக்களுக்குமான அர்த்தம் குழப்பமாகவே இருக்கும். இதுபோன்று ஒரே உச்சரிப்பில் உள்ள வார்த்தைகள் தமிழில் அதிகம் உள்ளது. அதனால், நமக்கு எதற்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது. அவற்றில் ஒன்று தான் வன்னம் வண்ணம்.
எனவே, இப்பதிவின் வாயிலாக வன்னம் வண்ணம் என்றால் என்ன.? என்பதையும், இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு பற்றியும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் வன்னம் வண்ணம் வேறுபாடு அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வன்னம் வண்ணம் பொருள் வேறுபாடு:
- வன்னம், வண்ணம் இவை இரண்டிற்கும் நிறம் அழகு என்ற இரு பொருள்/அர்த்தம் உள்ளது. இருந்தாலும் பெரும்பாலும், நிறத்தை குறிக்க நாம் வண்ணம் என்ற சொலினையே பயன்படுத்துகிறோம். நிறங்களை குறிப்பிட வண்ணம் என்ற வார்த்தை தான் சரியானது.
- வண்ணம் என்பதை அரி, நிறம் மற்றும் வர்ணம் என்றும் குறிப்பிடுகிறோம்.
- வன்னம்” என்றால் எழுத்து அல்லது கேள்வி என்பதைக் குறிக்கிறது. இது நிறம் அல்லது அழகு எனும் பொருளையும் கொண்டுள்ளது, ஆனால் முக்கியமாக/பெரும்பாலும் எழுத்து அல்லது எழுத்து வடிவத்தை குறிக்கிறது.
- வன்னம் வண்ணம் இவை இரண்டிற்கும் வேறுபாடான பொருளும் உண்டு.
- வன்னம் என்பது எழுத்து என்ற அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- வண்ணம் என்பது, இசை, வண்ணம் மற்றும் இசைப்பாட்டு வகையை குறிக்கிறது.
கோவில் Vs கோயில்..! இதில் எது சரி உங்களுக்கு தெரியுமா..?
வண்ணம் எடுத்துக்காட்டு:
- வண்ணம் கொண்ட வெண்ணிலவே
- வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
- வானவில் பல வண்ணங்களை உடையது.
- கம்ப இராமாயணத்தில், இராமபிரானின் கைவண்ணம், கால்வண்ணம் பற்றியெல்லாம் கம்பம் பாட்டில் காணலாம்.
சொல் | வேறுபாடு | பயன்பாடு |
வன்னம் | எழுத்து, கேள்வி | மொழி, எழுத்து வடிவங்கள். |
வண்ணம் | நிறம், அழகு, இசை வகைகள் | கலை, இசை, அழகு |
ந ன ண வேறுபாடு சொற்கள் – தெளிவான விளக்கங்கள் இதோ..
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |