வேளாண்மை சார்ந்த படிப்பு | Agri Based Education in Tamil
நாம் சாப்பிடும் உணவிற்கு அடிப்படையாக இருப்பது வேளாண்மை தான். பல்வேறு கால சூழ்நிலையினால் விவசாயமானது பாதிப்படைந்து வருவதால் எதிர்காலங்களில் விவசாயத்தின் முக்கியத்துவம் மிகவும் பயன்படும். அப்போது வேளாண் சார்ந்த பட்ட படிப்புகள் முடித்திருப்பவர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கும். பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக்கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும். மருத்துவ பிரிவில் இடம் கிடைக்காத சில மாணவர்கள் பாட பிரிவாக தேர்வு செய்வது வேளாண் படிப்பினை தான். வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது. இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான். நாம் இந்த பதிவில் மாணவர்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி நிலையில் இருக்க சில வேளாண் சார்ந்த படிப்புகளையும், அவை வழங்கும் வேலைவாய்ப்பினையும் இங்கே பார்ப்போம் வாங்க..
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..! |
வேளாண் பொறியியல்:
இன்று விவசாயம் கூட தொழில்நுட்பம் ஆகிவிட்டது. நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை போன்ற அனைத்திலும் அதற்கான இயந்திரங்கள் வந்துவிட்டன. அதனால் வேளாண் பொறியியல் முக்கியமான பட்ட படிப்பாக விளங்குகிறது. இந்த வேளாண் பொறியியல் பட்ட படிப்பு 4 வருட படிப்பாகும்.
மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் மதிப்பெண்ணையும் அடிப்படையாக வைத்து இப்படிப்பிற்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் உபயோகப்படுத்தும் பணி வேளாண் பொறியாளர்களுடையது. வேளாண் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் ப்ராசஸிங் நிறுவனங்கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு. தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப்படிப்பை அளிக்கிறது.
வேளாண் தகவல் தொழில்நுட்பம்:
அக்ரிகல்ச்சர் இன்பர்மேசன் டெக்நாலாஜி படிப்பும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புதான். இந்த பட்ட படிப்பானது 4 வருடம். வேளாண் துறையிலும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத்துவத்தை பெறும்.
இந்தியாவில் உள்ள 65 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக இருக்கிறது. கிராமங்களில்வசித்து கொண்டிருப்பவர்களுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தகவல்கள் சென்றடைவதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது.
விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற்றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்சனை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம்.
விவசாயம் சார்ந்த தமிழ் பெயர்கள் |
இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப்மென்டல் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி & அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங்களை கற்றுத்தருகின்றனர். கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.
வேளாண்துறையின் பல படிப்புகள்:
வேளாண்துறையில் இது மட்டுமல்லாமல் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங், அக்ரி பினான்ஸ், அக்ரிகல்சுரல் பாலிசி, அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், சாயில் சயின்ஸ், புட் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்புகளும் வேளாண் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளாக இருக்கின்றன.
அக்ரிகல்சர் அண்ட் எக்ஸ்டென்சன் எஜூகேசன், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ், அக்ரிகல்சர் எஜுகேசன் டெக்னிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளும் உள்ளன. பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல்வேறு படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்வி நிறுவனத்தில் மேல் கூறிய பட்ட படிப்புகளை பெரும்பாலும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை படிக்கலாம். இந்த பிரிவினை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
வேலை:
வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பனர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்லலாம்.
விவசாயம் பற்றிய கட்டுரை |
அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேளாண் பிரிவு படிப்பில் விருப்பம் உள்ளவர்கள் வேளாண் படிப்பை தேர்வு செய்து சிறப்பான எதிர்கால வாழ்க்கையினை அமைத்துக்கொள்ளுங்கள்..
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |