10th Tamil Alagiduthal | 10th Tamil Alagitu Vaipadu
நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் 10-ம் வகுப்பில் கேட்கப்படும் அலகிட்டு வாய்ப்பாடு பற்றி தெரிந்துகொள்வோம். பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எளிதாக ஐந்து மதிப்பெண்கள் வாங்குவதற்கு இது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எந்த பாடத்தையும் புரிந்து கொண்டு படித்தால் எளிதில் மதிப்பெண்கள் வாங்க முடியும். அதே போல் இந்த அலகிட்டு வாய்ப்பாடையும் புரிந்து கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சரி வாங்க திருக்குறள் அலகிட்டு வாய்ப்பாடை படித்தறியலாம்.
Alagitu Vaipadu for Thirukural in Tamil 10th:
- சீர் என்பது அசைகளால் ஆனது. ஒரு சீரைப் பிரித்து அசைகளாகப் பார்ப்பதே அலகிடுதல் எனப்படும்.
- அசை நேரசை, நிரையசை என இரண்டு வகை உள்ளது.
நேரசை:
- நேரசையில் தனிக்குறில், தனிக்குறில் ஒற்று, தனி நெடில் மற்றும் தனி நெடில் இடம் பெற்றிருக்கும்.
உதாரணம்:
- தனிக்குறில் – க
- தனிக்குறில் ஒற்று – கல்
- தனிநெடில் – கா
- தனி நெடில் ஒற்று – கால்
நிரையசை:
- நிரையசையில் இரண்டு குறில், இரண்டு குறிலுடன் ஒற்று இணைந்து வரும். மற்றும் குறில் நெடில் இணைந்து, குறில் நெடில் இணைந்த ஒற்று வரும்.
உதாரணம்:
- இரு குறில் – கட
- இரு குறில் ஒற்று – கடல்
- குறில் நெடில் இணைந்து – விழா
- குறில் நெடில் இணைந்த ஒற்று – விழார்
வாய்ப்பாடு:
ஓரசைச்சீர்: (ஈற்றுசீர்)
- நேர் – நாள்
- நிரை – மலர்
- நேர்பு ( நேர் – நேர் ) – காசு
- நிரைபு ( நிரை – நேர் ) – பிறப்பு
ஈரசைச்சீர்:
- நேர் – நேர் – தேமா
- நிரை – நேர் – புளிமா
- நிரை – நிரை – கருவிளம்
- நேர்- நிரை – கூவிளம்
மூவசைச்சீர்: (காய்ச்சீர்)
- நேர்- நேர் – நேர் – தேமாங்காய்
- நிரை – நேர் -நேர் – புளிமாங்காய்
- நிரை – நிரை – நேர் – கருவிளங்காய்
- நேர் – நிரை – நேர் – கூவிளங்காய்
10th Std Slagitu Vaipadu for Thirukural in Tamil
அலகிட்டு வாய்பாடு 10th திருக்குறள்:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
சீர் | அசை | வாய்ப்பாடு |
இடிப்|பா|ரை | நிரை + நேர்+ நேர் | புளிமாங்காய் |
இல்|லா|த | நேர்+ நேர்+நேர் | தேமாங்காய் |
ஏ|மரா | நேர்+நிரை | கூவிளம் |
மன்|னன் | நேர்+நேர் | தேமா |
கெடுப்|பார் | நிரை+ நேர் | புளிமா |
இலா|னும் | நிரை+ நேர் | புளிமா |
கெடும் | நிரை | மலர் |
இக்குறட்பா மலர் எனும் வாய்ப்பாட்டை கொண்டு முடிந்துள்ளது |
குறள் 8:
பல்லார் பகைகொலளின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
சீர் | அசை | வாய்ப்பாடு |
பல்|லார் | நேர்+ நேர் | தேமா |
பகை|கொல|ளின் | நிரை+ நிரை+நேர் | கருவிளங்காய் |
பத்|தடுத்|த | நேர்+ நிரை+நேர் | கூவிளங்காய் |
தீ|மைத்|தே | நேர்+ நேர்+நேர் | தேமாங்காய் |
நல்|லார் | நேர்+நேர் | தேமா |
தொடர்|கை | நிரை+ நேர் | புளிமா |
விடல் | நிரை | மலர் |
இக்குறட்பா மலர் எனும் வாய்ப்பாட்டை கொண்டு முடிந்துள்ளது |
அலகிட்டு வாய்பாடு 10th திருக்குறள் எப்பொருள்:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
சீர் | அசை | வாய்ப்பாடு |
எப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
எத்|தன்|மைத் | நேர்-நேர்-நேர் | தேமாங்காய் |
தா|யினும் | நேர்-நிரை | கூவிளம் |
அப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
மெய்ப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
காண்|ப | நேர்-நேர் | தேமா |
தறி|வு | நிரைபு | பிறப்பு |
இக்குறட்பா பிறப்பு எனும் வாய்ப்பாட்டை கொண்டு முடிந்துள்ளது |
சீர் பிரிக்கும் முறை – அலகிட்டு வாய்பாடு 10th:
- மெய்யெழுத்துகளைப் முதலில் பிரிக்கவும்.
- மெய்யெழுத்தோடு 1 குறில் அல்லது நெடில் இருந்தால் அப்படியே விட்டு விடவும்.
- மெய்யெழுத்தோடு 2 குறில் இருந்தால் பிரிக்க வேண்டாம், நெடில் இருந்தால் பிரிக்க வேண்டும்.
- மெய்யெழுத்து இல்லாமல் 2 ,3 எழுத்து இருப்பின் இருகுறில் பிரிக்கவும், குறி்ல் நெடில் இணைத்து பிரிக்கவும்.
- குறுகிய ஓசைகளை உடைய எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள் (அ,இ,உ,எ,ஒ) ஆகும்.
- நீண்ட ஓசைகளை உடைய எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ) ஆகும்.
திருக்குறள் அலகிட்டு வாய்பாடு |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |