வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

6th Tamil Book Back Questions and Answers Chapter 1.1 | ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்

Updated On: October 8, 2024 12:50 PM
Follow Us:
6th Tamil Book Back Questions and Answers
---Advertisement---
Advertisement

ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில் | 6th Tamil Book One Mark Questions and Answers

சமச்சீர் கல்வி 6 வது தமிழ் வழிகாட்டி – 6th Standard Tamil:-  வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் பாடத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள் பற்றி பார்ப்போம். குறிப்பாக இந்த பதிவு மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் பாடத்தில் உள்ள கேள்வி பதில்களை படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகளை படித்தறியலாம்.

6th Tamil Book Back Questions and Answers in Tamil:

1.1 இன்பத்தமிழ் – 6th Standard Tamil Book 1st Term

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

பாரதிதாசன் 



6th Standard Tamil Question Answer

I. சமச்சீர் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் முதல் பருவம்:

1 ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்

  1. சமூகம்
  2. நாடு
  3. வீடு
  4. தெரு

விடை: சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்.

  1. மகிழ்ச்சி
  2. கோபம்
  3. வருத்தம்
  4. அசதி

விடை: அசதி

3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________

  1. நிலயென்று
  2. நிலவென்று
  3. நிலவன்று
  4. நிலவுஎன்று

விடை: நிலவென்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. தமிழங்கள்
  2. தமிழெங்கள்
  3. தமிழுங்கள்
  4. தமிழ்எங்கள்

விடை: தமிழெங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. அமுது + தென்று
  2. அமுது + என்று
  3. அமது + ஒன்று
  4. அமு + தென்று

விடை: அமுது + என்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. செம்மை + பயிர்
  2. செம் + பயிர்
  3. செமை + பயிர்
  4. செம்பு + பயிர்

விடை: செம்மை + பயிர்



II. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1. விளைவுக்கு – பால்
2. அறிவுக்கு – வேல்
3. இளமைக்கு – நீர்
4. புலவர்க்கு – தோள்

விடை: 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ.



III. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சாெற்களை எடுத்து எழுதுக

  1. பேர் – நேர்
  2. பால் – வேல்
  3. ஊர் – நீர்
  4. வான் – தேன்
  5. தாேள் – வாள்


ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில் – கூடுதல் வினாக்கள் (6th Tamil Book Back Questions and Answers )

A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _______________ அமுதென்று பேர்

  1. தமிழிற்கு
  2. தமிழுக்கு
  3. தமிழுக்கும்
  4. தமிழுக்கே

விடை: தமிழுக்கும்

2. தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது

  1. தேன்
  2. நெய்
  3. நெல்
  4. பால்

விடை: பால்

3. தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது

  1. அம்பு
  2. கேடயம்
  3. வாள்
  4. வேல்

விடை: வேல்

4. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது

  1. சாேறு
  2. தேன்
  3. நீர்
  4. பால்

விடை: தேன்

5. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.

  1. அணிகலம்
  2. கவசம்
  3. வாள்
  4. வேல்

விடை: வாள்

6. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. இராமலிங்க அடிகளார்
  4. திருவள்ளுவர்

விடை: பாரதிதாசன்

7. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுபவர்

  1. பாரதிதாசன்
  2. கண்ணதாசன்
  3. அழ.வள்ளியப்பா
  4. கவிமணி

விடை: பாரதிதாசன்

8. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்

  1. தேசிய விநாயகம் பிள்ளை
  2. சுரதா
  3. வள்ளலார்
  4. பாரதிதாசன்

விடை: பாரதிதாசன்

9. தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர்

  1. பாரதியார்
  2. ஓளவையார்
  3. பாரதிதாசன்
  4. வள்ளலார்

விடை: பாரதிதாசன்

10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது

  1. அம்பு
  2. வானம்
  3. வாள்
  4. வேல்

விடை: வானம்

11. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் _____________ போன்றது

  1. தேன்
  2. தோள்
  3. நெல்
  4. பால்

விடை: தோள்



B. பொருத்துக

1. வாழ்வுக்கு – வாள்
2. உயர்வுக்கு – ஊர்
3. கவிதைக்கு – வான்

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – அ



C. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. _________________ தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன

விடை: தாய்மொழியைத்

2. _________________ தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்

விடை: பாரதிதாசன்

3. எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் _________________

விடை: தமிழ்

4. _________________ எங்கள் சமூக வளர்ச்சிக்கு ஊர் ஆகும்

விடை: இன்பத்தமிழ்



D. சேர்த்து எழுதுக:

  1. அமுது + என்று = அமுதென்று
  2. இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்
  3. மணம் + என்று = மணமென்று

பிரித்து எழுதுக:

  1. நிலவென்று = நிலவு + என்று
  2. புகழ்மிக்க = புகழ் + மிக்க
  3. சுடர்தந்த = சுடர் + தந்த
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்
ஆறாம் வகுப்பு வளர் தமிழ் கேள்வி பதில்
கனவு பலித்தது வினா விடை
ஆறாம் வகுப்பு இயல் 1 தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் வினா விடை
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now