6th to 12th Tamil Ilakkanam PDF
நண்பர்களுக்கு வணக்கம்.. அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. TNPSC குரூப் 4 தேர்வுகளில் பொது தமிழ் பாடத்திட்டத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் கேட்கப்படுகிறது. அவற்றில் தமிழ் இலக்கணமும் அடங்கும்.
இவற்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் இலக்கணம் வினா விடைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறவம். ஆக TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம்.
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் இலக்கணம் வினா விடை – 6th to 12th Tamil Ilakkanam PDF
1 தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
2 உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்துகள் எண்ணிக்கை?
விடை: ஐந்து
3 உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்துகள் எண்ணிக்கை?
விடை: ஏழு
4 உயிர்மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
5 எழுத்துக்கள் எதனை வகைப்படும்?
விடை: இரண்டு
6 முதல் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
விடை: 30
7 சார்பு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: பத்து
8 மயங்கொலி எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: எட்டு
9 சுட்டு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
10 வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
11 இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
12 பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
13 பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?
விடை: இரண்டு
14 குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
15 குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
16 வழக்கு எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
17 இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
18 தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
19 போலி எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
20 இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
21 நன்னூலின்படி தமிலுள்ள ஓரெழுத்து ஒரேமொழிகளின் எண்ணிக்கை?
விடை: 42
22 பதம் எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
23 பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
24 பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
25 தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
26 எழுத்துக்களின் பிறப்பு ——- வகையாகப் பிரிப்பர்?
விடை:இரண்டு
27 வினைமுற்று எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
28 எச்சம் எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
29 வேற்றுமை எத்தனை வகைப்படும்?
விடை: எட்டு
30 தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
31 தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
விடை: ஒன்பது
32 புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
33 விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
34 யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு ய=உரிய உறுப்புகள்?
விடை: ஆறு
35 அசை எத்தனை வகைப்படும்?
விடை:
இரண்டு
36 தளை எத்தனை வகைப்படும்?
விடை: ஏழு
37 அடி எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
38 தொடை எத்தனை வகைப்படும்?
விடை: எட்டு
39 பா எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
40 ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
விடை: 16
41 பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
42 தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஏழு
43 தொல்காப்பியர் காட்டும் புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஏழு
44 புறப்பெருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்தினிகளை —- ஆக வகைப்படுத்தியுள்ளது.
விடை: பன்னிரண்டு
45 அளபெடை எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு
46 உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
47 மொழி எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
48 வழுவமைதி எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
49 வினா எத்தனை வகைப்படும்?
விடை: ஆறு
50 விடை எத்தனை வகைப்படும்?
விடை: எட்டு
51 வெளிப்படை விடைகள் எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
52 குறிப்பு விடைகள் எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
53 பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
விடை: எட்டு
54 வெண்பா எத்தனை வகைப்படும்?
விடை: ஐந்து
55 தீவக அணி எத்தனை வகைப்படும்?
விடை: மூன்று
56 தன்மையணி எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
57 மொழி முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: 22
58 மொழி இறுதி எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
விடை: 24
59 ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?
விடை: நான்கு
60 தொடை விகற்பங்கள் எத்தனை வகைப்படும்?
விடை: 35
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒன்பதாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் pdf
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |