ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்

Advertisement

வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் வினா விடை | 7th Std Social Science Term 1 answer lesson 2

அனைவருக்கும் பிடித்த பாடம் என்றாலே அது சமூக அறிவியல் பாடம் தான். சமூக அறிவியல் பாடம் படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் விரைவாக புரிந்து கொள்ளும் படியும் அமைந்திருக்கும். நாம் இந்த பதிவில் ஏழாம் வகுப்பு புத்தகத்தில் சமூக அறிவியல் பாடத்தில் இருக்கும் வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் வினா விடைகளை படித்தறியலாம். இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வினா விடைகள் யாவும் மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும்படி இருக்கும். பள்ளி படிக்கும் மாணவர்கள் இதை படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வாங்க வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் வினா விடைகளை படித்தறியலாம்.

7th Social Science Guide Term 1 Lesson 2 in Tamil

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  • கல்ஹணர்
  • விசாகதத்தர்
  • ராஜசேகரர்
  • சந்த் பார்தை

விடை : சந்த் பார்தை

2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  • முதலாம் போஜா
  • முதலாம் நாகபட்டர்
  • ஜெயபாலர்
  • சந்திரதேவர்

விடை : முதலாம் நாகபட்டர்

3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  • மங்கோலியா
  • துருக்கி
  • பாரசீகம்
  • ஆப்கானிஸ்தான்

விடை : ஆப்கானிஸ்தான்

4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  • சிலை வழிபாட்டை ஒழிப்பது.
  • இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
  • இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
  • இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

விடை : இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.



கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _____________ ஆவார்.

விடை : தர்மபாலர்

2. கி.பி ______________ இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்.

விடை : 1712

3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார்.

விடை : சிம்மராஜ்

4. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

விடை :மத்திய பிரதேசத்தில்



பொருத்துக – ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்:

1. கஜுராகோ – அபு குன்று

2. சூரியனார் கோவில் – பந்தேல்கண்ட்

3. தில்வாரா கோவில் – கொனாரக்

விடை :

1. கஜுராகோ – பந்தேல்கண்ட்

2. சூரியனார் கோவில் – கொனாரக்

3. தில்வாரா கோவில் – அபு குன்று



சரியா? தவறா? – ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வி பதில்:

1. ‘ராஜபுத்ர’ என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

விடை : தவறு

2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடை : சரி

3. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

விடை : தவறு

4. ‘ரக்ஷாபந்தன்’ சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

விடை : சரி

5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

விடை : தவறு



கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டுக் காட்டவும்.

1. கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

  • காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
  • காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  • கூற்று தவறு. காரணம் சரி.
  • கூற்றும் காரணமும் தவறு.

விடை : காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

2. கூற்று I – மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.

கூற்று II – மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவர்.

  • I சரி.
  • II சரி.
  • I மற்றும் II சரி.
  • I மற்றும் II தவறு.

விடை : I சரி.

3. கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி.பி.(பொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.

காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

  • காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  • காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  • கூற்று சரி, காரணம் தவறு.
  • கூற்று தவறு, காரணம் சரி.

விடை : காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

4. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.

காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.

  • காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  • காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  • கூற்று சரி, காரணம் தவறு.
  • கூற்று தவறு, காரணம் சரி.

விடை : கூற்று சரி, காரணம் தவறு.



கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/ எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. ‘ரக்ஷாபந்தன்’ மரபு ராஜபுத்திரர்களுடையது.

2. வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ‘ரக்ஷாபந்தன்’ விழாவைத் தொடங்கினார்.

3. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

A. கூற்று ‘1’ சரியானது.
B. கூற்று ‘2’ சரியானது.
C. கூற்று ‘3’ சரியானது.
D. மேற்கண்ட அனைத்தும் சரியானவை

விடை : மேற்கண்ட அனைத்தும் சரியானவை



ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை

ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக.

மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

2. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.

  • பிரதிகாரர்கள்
  • செளகான்கள்
  • சாளுககியர்கள்
  • பரமார்கள்

3. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

  • கோபாலர்

4. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • உமையத்துகளும்
  • அப்பாசித்துகளும்
  • தொடக்கக்கால கலீஃபத்துகளாகும்.

5. காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.

  • தாகீர்
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement