ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள் | Samacheer Kalvi 7th Social Science Books Answers

7th Social Science Book Back Questions With Answers in Tamil

7th Social Science Book Back Questions With Answers in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி அறிவு சார்ந்த பகுதியில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள வினா விடைகள் இந்த தொகுப்பில் படித்து அறியலாம் வாங்க. இந்த பதிவு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இன்றி போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம். இப்பொழுது நாம் சமூக அறிவியலில் வரலாறு பாடத்தில் உள்ள இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (Term 1) பாட பகுதியில் உள்ள வினா விடைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ______________ என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  1. காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
  2. பயணக்குறிப்புகள்
  3. நாணயங்கள்
  4. பொறிப்புகள்

விடை: பொறிப்புகள்

2. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  1. வேளாண்வகை
  2. சாலபோகம்
  3. பிரம்மதேயம்
  4. தேவதானம்

விடை: தேவதானம்

3. ______________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  1. சோழர்
  2. பாண்டியர்
  3. ராஜபுத்திரர்
  4. விஜயநகர அரசர்கள்

விடை: சோழர்

4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  1. அயினி அக்பரி
  2. தாஜ் – உல் – மா -அசிர்
  3. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  4. தாரிக் – இ – பெரிஷ்டா

விடை: தாஜ் – உல் – மா -அசிர்

5. அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  1. மார்க்கோபோலோ
  2. அல் -பரூனி
  3. டோமிங்கோ பயஸ்
  4. இபன் பதூதா

விடை: இபன் பதூதா



கோடிட்ட இடங்களை நிரப்புக – Samacheer Kalvi 7th Social Science Books Answers:

1. ___________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

விடை: உத்திரமேரூர்

2. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ___________ ஆவார்.

விடை: முகமது காேரி

3. ஒரு ___________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.

விடை: ஜிட்டல்

4. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார்.

விடை: மின்கஜ் உஸ் சிராஜ்

5. கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ___________ ஆவார்.

விடை: நிகாேலாே காேண்டி



ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வி பதில்

பொறுத்துக: 

1. கஜுராகோ – ஒடிசா
2. கொனாரக் – ஹம்பி
3. தில்வாரா – மத்தியப்பிரதேசம்
4. விருப்பாக்சா – ராஜஸ்தான்

விடை:

1. கஜுராகோ – மத்தியப்பிரதேசம்
2. கொனாரக் – ஒடிசா
3. தில்வாரா – ராஜஸ்தான்
4. விருப்பாக்சா – ஹம்பி



சரியா? தவறா?

1. பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.

விடை: சரி

2. நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

விடை: தவறு

3. தாமிரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.

விடை: சரி

4. டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

விடை: தவறு



கூற்றை காரணத்தோடு பொருத்துக பொருத்தமான விடையை ( √ ) டிக் இட்டு காட்டவும்:

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.

காரணம் : இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

  1. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  2. கூற்று தவறு, காரணம் சரி.
  3. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  4. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

விடை: காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.



தவறான இணையை கண்டறியவும் – 7th Social Science Book Back Questions With Answers in Tamil:

அ) மதுரா விஜயம் – கங்காதேவி
ஆ) அபுல் பாசல் – அயினி அக்பர்
இ) இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்
ஈ) அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்

விடை: இபன் பதூதா – தாகுயூக்-இ- ஹிந்த்



பொருந்தாததைக் கண்டுபிடி:

பொறிப்புகள், பயணக்குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்.

விடை: பயணக்குறிப்புகள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com