ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம் | 7th Std Tamil Book Back Questions And Answers Chapter 1.2

7th Std Tamil Book Back Questions And Answers

ஏழாம் வகுப்பு இயல் 1 ஒன்றல்ல இரண்டல்ல | 7th Std Tamil Book Back Questions And Answers Chapter 1.2

பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் ஒவ்வொரு வகுப்பிற்கும் உள்ள பாடத்தில் உள்ள வினா விடைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் 7-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒன்றல்ல இரண்டல்ல (Chapter 1.2) பாட பகுதியில் உள்ள வினா விடைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி பாடல் வரிகள்

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தரும் நாட்டில்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி)

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் போங்காதிரும் தந்துதவும் நன்செய்வளம்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி)

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்
புகழ்கொண்ட  குறளோடு அகம்புறமும் – செம்
பொருள்கொண்ட தமிழ்சங்க இலக்கிய பெருஞ்செல்வம்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி)

முல்லைக்கு தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்ப்படைத்த உபகாரி – கவிச்
சொல்லுக்குத் தலைக்கொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி)

–உடுமலை நாராயண கவி.



ஒன்றல்ல இரண்டல்ல மதிப்பீடு

சொல்லும் பொருளும்

  • ஒப்புமை – இணை
  • முகில் – மேகம்
  • அற்புதம் – விந்தை
  • உபகாரி – வள்ளல்


சமச்சீர் கல்வி ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்:

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி

விடை : இ) பரணி

2. வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்

விடை: ஆ) முகில்

3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல

விடை : அ) இரண்டு + அல்ல

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்

விடை : அ) தந்து + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..

அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத

விடை : இ) ஒப்புமையில்லாத



ஒன்றல்ல இரண்டல்ல – கூடுதல் வினாக்கள் (7th Std Tamil Book Back Questions And Answers)

பொருள் தருக

  1. முகில் – மேகம்
  2. உபகாரி – வள்ளல்
  3. அருள் – இரக்கம்
  4. சொல் – கூற
  5. கவி – கவிஞன்

பிரித்து எழுதுக:

  1. ஒன்றல்ல = ஒன்று + அல்ல
  2. இரண்டல்ல = இரண்டு + அல்ல
  3. செங்கனி = செம்மை + கனி
  4. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

எதிர்ச்சொல் தருக:

  1. பெருமை x சிறுமை
  2. இயற்கை x செயற்கை
  3. புகழ் x இகழ்
  4. கனி x காய்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ________________ மிக்கவர்களாக விளங்கினர்.

விடை : கொடைத்திறன்

2. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் ________________

விடை : வேள்பாரி

3. புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் ________________

விடை : குமண வள்ளல்

4. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலில் ஆசிரியர் ________________

விடை : உடுமலை நாராயண கவி

5. பகைவரை வென்று பாடுவது ________________ இலக்கியம்

விடை : பரணி

6. உடுமலை நாராயண கவியின் இயற்பெயர்  ________________

விடை : நாராயணசாமி

ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com