எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை விளக்கங்கள்
இன்றைய பதிவில் எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் அமைந்துள்ள வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். சமூக அறிவியல் பாடத்தை நாம் எப்போதும் கஷ்டம் என்று நினைத்து படித்தால் அந்த பாடம் எப்போதுமே வெறுப்பாகத்தான் தெரியும். எளிமையாக புரிந்துகொண்டு படித்தால் சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்களை பெறலாம். சரி வாங்க எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் வினா (8th social science exercise 1.1 in tamil) விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
ஐரோப்பியர்களின் வருகை:
கேள்வி :1
சரியான விடையை சேர்ந்தெடுக்கவும்:
- இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார் ?
விடை : அல்போன்சோ-டி- அல்புகர்க்
2. ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டு பிடித்ததில் முதன்மையாக இருந்தது எது?
விடை : போர்ச்சுகல்
3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றபட்டது?
விடை : துருக்கி
4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
விடை : இங்கிலாந்து
5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?
விடை : ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை
6. ஐரோப்பியர் நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
விடை : பிரெஞ்சுக்காரர்கள்
7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கபாடியின் வர்த்தக மையமாக இருந்தது எது ?
விடை : டேனியர்கள்
கேள்வி :2
கோடிட்ட இடத்தை நிரப்புக :
- இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம்(NAI) _________ அமைந்துள்ளது.
விடை : புது டில்லியில்
2. போர்ச்சுகீசிய மாலுமியான பார்தோலோமிய டயஸ் _________என்பவரால் அதிரிக்கப்பட்டார்.
விடை : மன்னன் இரண்டம் ஜான்
3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556 இல் _________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது .
விடை : போர்ச்சுகீசிய
4. முகலாய பேரரசர்_________ இந்தியாவில் ஆங்கிலேயர் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
விடை : ஜஹாங்கீர்
5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் _________ என்பவரால் நிறுவப்பட்டது.
விடை : கால்பர்ட்
6. _________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டத்தை வெளியிட்டார்.
விடை : நான்காம் கிறிஸ்டியன்
கேள்வி :3
பொருத்துக :
டச்சுக்காரர்கள் – 1602
ஆங்கிலேயர்கள்-1600
டேனியர்கள் – 1616
பிரெஞ்சுக்காரர்கள் – 1664
கேள்வி : 4
சரியா/தவறா எனக் குறிப்பிடுக :
1. சுயதரிசை எழுதப்பட்ட ஆதாரங்களும் ஒன்று ஆகும்.
விடை : சரி
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களும் ஓன்று ஆகும்.
விடை : சரி
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்
விடை : தவறு
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கும் இடம் ஆவணக்காப்பகம் என்றழைக்கப்படுகிறது
விடை : சரி
கேள்வி :5
வினாவிடைகள் :
1 ஆவணக் காப்பகம் பற்றி சிறு குறிப்பு தருக?
- வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கும் இடம் ஆவணக்காப்பகம் என்றழைக்கப்படுகிறது.
- கடந்த கால நிர்வாக முறையை புரிந்து கொள்வதற்கான அனைத்துத் தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக ஆவணக் காப்பகம் விளங்குகிறது.
- நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக?
- நிர்வாக வரலாற்றை அறிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கிறது. நவீன இந்தியாவின் முதல் நாணயம் கிபி 1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
- இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி “ என என் அழைக்கப்படுகிறார்?
இளவரசர் ஹென்றி உலகில் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார், எனவே இவர் மாலுமி ஹென்றி என அழைக்கப்படுகிறார்.
4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயர்களை குறிப்பிடுக?
பழவேற்காடு, சூரத், சின்சுரா காஷிம்பஜார், பாட்னா , நாகப்பட்டினம் பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்கள் டச்சுக்காரர்கள் முக்கிய வர்த்தக இடங்கள் இருந்தன.
5. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களை பற்றி குறிப்பிடுக?
மெட்ராஸ் பம்பாய் மசூலிப்பட்டினம் சூரத் ஆக்ரா அகமதாபாத் புரோத் போன்ற இடங்கள் ஆங்கிலேயர்களின் வர்த்தக மையமாக இருந்தன.
கேள்வி :6
விரிவான விடையளி :
- நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக?
- நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல் , சமூக பொருளாதாரம் மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன.
- தொடக்ககாலத்திலிருந்தே டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், டேனியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்க பதிவேடுகளில் பதிவுசெய்துள்ளனர்.
- பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்புமிக்க ஆதாரமாக உள்ளன.
- லிஸ்பன் ,கோவா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்று பெட்டகமாகும்.
2. போர்ச்சுகீசியர் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர் ?
- போர்ச்சுகீசியர் இளவரசர் ஹென்றி உலகில் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
- வாஸ்கோடகாமா இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கிபி 1498 இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். வாஸ்கோடகாமா1501 கண்ணனூரில் வர்த்தக மையத்தை நிறுவினார்.பின்னர் கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார்.
3. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையத்தை நிறுவினார்கள்?
- இங்கிலாந்து ராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31இல் ஒரு அனுமதி பட்டம் வழங்கினார்.
- பேரரசர் ஜஹாங்கீர் 1613 இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார். ஆரம்பத்தில் இது ஆங்கிலேயர்களின் தலைமையகமாக இருந்தது.
- 1615 ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.
- வணிகம் செய்யும் அனுமதியை பெற்ற சர் தாமஸ் ரோ புறப்படும் முன் ஆக்ரா , அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார் .
- ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடாவில் உள்ள மசூலிப்பட்டினத்தில் 1611 இல் நிறுவினார்.
- 1690 ஆம் ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சரனாக் என்பவரால் ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது.
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














