வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோணக்காத்துப் பாட்டு எட்டாம் வகுப்பு வினா விடை | 8th Samacheer Kalvi Tamil Question Answers

Updated On: January 8, 2022 7:18 AM
Follow Us:
8th std Tamil Book Answers Term 1 Lesson 2.2
---Advertisement---
Advertisement

கோணக்காத்துப் பாட்டு கொஸ்டின் ஆன்சர் | 8th std Tamil Book Answers Term 1 Lesson 2.2

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கல்வி அறிவு சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்பு கோணக்காத்துப் பாட்டில் அமைந்துள்ள வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். இணையதள வழியில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு நடத்தி வரும் அனைத்து விதமான தேர்வுகளுக்கும் பெரும்பாலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் தான் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் தேர்வாளர்கள் அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.!

எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள்

எட்டாம் வகுப்பு இயல் இரண்டு கோணக்காத்துப் பாட்டு வினா விடை

I. சொல்லும் பொருளும்:

  • முகில் – மேகம்
  • வின்னம் – சேதம்
  • கெடிகலங்கி – மிக வருந்தி
  • வாகு – சரியாக
  • சம்பிரமுடன் – முறையாக
  • காலன் – எமன்
  • சேகரம் – கூட்டம்
  • மெத்த – மிகவும்
  • காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

1. முகில்
2. துகில்
3. வெயில்
4. கயல்

விடை: முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

1. பாலனை
2. காலனை
3. ஆற்றலை
4. நலத்தை

விடை: காலனை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

1. விழுந்த + அங்கே
2. விழுந்த + ஆங்கே
3. விழுந்தது + அங்கே
4. விழுந்தது + ஆங்கே

விடை: விழுந்தது + அங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

1. செ + திறந்த
2. செத்து + திறந்த
3. செ + இறந்த
4. செத்து + இறந்த

விடை: செத்து + இறந்த

5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

1. பருத்திஎல்லாம்
2. பருத்தியெல்லாம்
3. பருத்தெல்லாம்
4. பருத்திதெல்லாம்

விடை: பருத்தியெல்லாம்

எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் எழுத்துக்களின் பிறப்பு வினா விடைகள்


கோணக்காத்துப் பாட்டு வினா விடை

III. குறுவினா:

கேள்வி 1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

விடை: எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

கேள்வி 2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

விடை: தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

கேள்வி 3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

விடை: சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.


IV. சிறுவினா:

கேள்வி 1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  • வொங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
  • தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

கேள்வி 2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

  • திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.
எட்டாம் வகுப்பு இயல் 1 சொற்பூங்கா வினா விடைகள்

எட்டாம் வகுப்பு கோணக்காத்துப் பாட்டு வினா விடை – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ____________ அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும்.

விடை: தமிழ்நாடு

2. சேகரம் என்பதன் பொருள் ____________

விடை: கூட்டம்

3. ____________ கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

விடை: காங்கேய நாடு

4. பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ____________

விடை: காங்கேய நாடு


II. பிரித்து எழுதுக:

  • வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்
  • தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை
  • சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்
  • தானடந்து = தான் + அடைந்து
  • நாடெல்லாம் = நாடு + எல்லாம்
  • செத்திறந்து = செத்து + இறந்து
  • மார்க்கமான = மார்க்கம் + ஆன
  • வேகமுடன் = வேகம் + உடன்

III. குறுவினா:

கேள்வி 1. புலவர்கள் எவற்றை கும்மி பாடல்களாகப் பாடினர்?

விடை: நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மி பாடல்களாகப் பாடினர்.

கேள்வி 2. இயற்கை எப்பட்டது?

விடை: இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது.

கேள்வி 3. இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் என்ன நேரிடும்?

விடை: சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

கேள்வி 4. மாடி வீடுகள் எப்படி விழந்தன?

விடை: அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

கேள்வி 5. யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?

விடை: ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர்

கேள்வி 6. எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?

விடை: அழவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now