நிலம் பொது எட்டாம் வகுப்பு வினா விடை | Samacheer Kalvi 8th Tamil Book Back Questions and Answers in Tamil

8th std Tamil Book Answers Term 1 Lesson 2.3

எட்டாம் வகுப்பு தமிழ் வினா விடை | 8th std Tamil Book Answers Term 1 Lesson 2.3

மழலை செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் அமைய எங்களுடைய பதிவில் எட்டாம் வகுப்பு நிலம் பொது என்ற தமிழ் பாடத்தில் அமைந்துள்ள வினா விடைகளை (8th tamil book back questions with answers) பதிவு செய்துள்ளோம். மாணவ செல்வங்களாகிய அனைவரும் படித்து பயன் பெறுங்கள்..

கோணக்காத்துப் பாட்டு எட்டாம் வகுப்பு வினா விடை

நிலம் பொது கொஸ்டின் ஆன்சர் | நிலம் பொது வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கேள்வி 1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

 • தாயாக
 • தந்தையாக
 • தெய்வமாக
 • தூய்மையாக

விடை: தாயாக

கேள்வி 2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

 • இன் + ஓசை
 • இனி + ஓசை
 • இனிமை + ஓசை
 • இன் + னோசை

விடை: இனிமை + ஓசை

கேள்வி 3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

 • பால்ஊறும்
 • பாலூறும்
 • பால்லூறும்
 • பாஊறும்

விடை: பாலூறும்

II. தொடரில் அமைத்து எழுதுக:

கேள்வி 1. வேடிக்கை:

குழந்தை விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

கேள்வி 2. உடன்பிறந்தார்:

தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.


எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள்

நிலம் பொது எட்டாம் வகுப்பு வினா விடை

III. குறுவினா:

கேள்வி 1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

விடை:

 • இந்த பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
 • அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலை கொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

கேள்வி 2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

விடை:

 • இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுப் புனிதமாகும்.
 • இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்கு தாயாகும்.
 • அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்கு உரியதாகும்.

கேள்வி 3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

விடை:

 • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
 • எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
 • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

IV. சிறு வினா:

கேள்வி 1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

விடை:

 • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.
  இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
 • இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
 • எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
 • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

கேள்வி 2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

விடை:

 • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
 • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
 • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் எழுத்துக்களின் பிறப்பு வினா விடைகள்

V. நெடு வினா:

கேள்வி 1: தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

விடை:

 • இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு புனிதமாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இது எமக்கு தாயாகும்.
 • நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது எனபது மிகவும் இயலாத ஒன்றாகும்.
 • நாங்கள் பூமியை தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.
 • நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
 • இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
 • இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
 • இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.
 • நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

நிலம் பொது – கூடுதல் வினாக்கள்

Samacheer Kalvi 8th Tamil Book Back Questions and Answers in Tamil

I. பிரித்து எழுதுக:

 • ஊசியிலை = ஊசி + இலை
 • மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை
 • உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்
 • நீரானது = நீர் + ஆனது
 • நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து
 • உங்களுடைய = உங்கள் + உடைய
 • பாழாக்கி = பாழ் + ஆக்கி
 • முறையிலிருந்து = முறையில் + இருந்து
 • காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்
 • ஒன்றாகும் = ஒன்று + ஆகும்
 • சொந்தமானவை = சொந்தம் + ஆனவை
 • பனித்துளி = பனி + துளி
 • புனிதமானது = புனிதம் + ஆனது
 • தண்ணீரன்று = தண்ணீர் + அன்று
 • தேவையானவை = தேவை + ஆனவை

II. சிறு வினா:

கேள்வி 1. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

விடை: அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர்.

கேள்வி 2. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

விடை: சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com